ஒரே கல்லில் 3 மாங்காய்.. ரூ.300-க்கு குறைவான விலையில் சூப்பர் பங்கு..!

பங்குச் சந்தையில் ஸ்மால் கேப் வகையை சேர்ந்த மல்டிபேக்கர் பங்கு ஆன க்ரோவி இந்தியாவின் பங்குகள் அதன் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்க திட்டமிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி முதல் முறையாக 3:1 இலவச பங்குகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க உள்ளது. அதன்படி, வரவிருக்கும் போனஸ் பங்கு வெளியீட்டிற்கு பதிவு தேதியாக நிறுவனம் அக்டோபர் 23 என நிர்ணையித்துள்ளது. பதிவு தேதியின் கடைசி தேதியில் பங்குகள் முந்தைய விலையில் வர்த்தகம் செய்யும் என்பதால், வரும் வாரத்தில் வர்த்தகத்தில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3:1 போனஸ் வெளியீடு:நிறுவனம் பட்டியலிடப்பட்ட பின்பு முதல் முறையாக, அதன் இயக்குநர்கள் குழு முதலீட்டாளர்களுக்கு போனஸ் வெளியீட்டை அறிவிக்க உள்ளது. எனவே, வரும் 24 அக்டோபர், 2024 வியாழன் அன்று நிறுவனத்தின் இயக்குநர் குழு கூடி அதன் முதலீட்டாளர்களுக்கு 3:1 என்ற விகிதத்தில் ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட போனஸ் ஈக்விட்டி பங்குகளை ஒதுக்குவது குறித்து பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும். அதாவது பதிவு தேதியில் டிமேட் கணக்கில் அதன் பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு 1 பங்குக்கும் 3 இலவச பங்குகளைப் பெறுவார்கள்.

ஒரே கல்லில் 3 மாங்காய்.. ரூ.300-க்கு குறைவான விலையில் சூப்பர் பங்கு..!

க்ரோவி இந்தியா போனஸ் வெளியீட்டு பதிவு தேதி: இலவசப் பங்குகளைப் பெற யார் தகுதியுடையவர்கள் என்பதைத் தீர்மானிக்க நிறுவனம் பதிவு தேதியை நிர்ணயித்துள்ளது. அதன்படி க்ரோவி இந்தியாவின் போனஸ் பங்குகளுக்கான பதிவு தேதி வரும் அக்டோபர் 23 புதன்கிழமை ஆகும். பதிவு தேதியின் கடைசி தேதியில் பங்குகள் முந்தைய விலையில் வர்த்தகம் செய்யும்.

க்ரோவி இந்தியா பங்கு விலை: கடந்த காலங்களில் நிறுவனம் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளன. மும்பை பங்குச் சந்தயில் கடந்த வெள்ளிக்கிழமை கடைசி வர்த்தகத்தில், பங்குகள் 5 சதவீதம் மேல் அதிகரித்து ரூ.280.50 ஆக முடிந்தது. அதேபோல், இதன் பங்குகள் கடந்த வாரத்தில் மட்டும் 27.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களில் 71.77% அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 3 மாதங்களில், பங்கு கிட்டத்தட்ட 70 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 6 மாதங்களில் 200 சதவிகித்திற்கும் அதிகமான வருவாயை வழங்கியுள்ளது.

நிறுவனத்தை பற்றி: க்ரோவி இந்தியா லிமிடெட் 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளது. ரியல் எஸ்டேட் சார்ந்த சொத்துக்களை உருவாக்கும் நோக்கத்துடன். திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களைக் கொண்ட குழுக்களுடன் க்ரோவி 'போடிக் அபார்ட்மெண்ட்ஸ்' டெவலப்பராக இருந்து வருகிறது.

இதுவரை, க்ரோவி இந்தியா குழுவால் உருவாக்கப்பட்ட பல சொகுசு வீடுகளுடன் தெற்கு டெல்லியில் சிறந்த பில்டர்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. உலகத் தரம் வாய்ந்த குடியிருப்புகளைக் கட்டுவதில் வெற்றிகரமாக முன்னேறி வரும் க்ரோவி இந்தியா, உயரமான குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுஸ் கம்யூனிட்டி, சில்லறை, வணிகம், வணிகம் மற்றும் விருந்தோம்பல் இடங்கள் போன்றவற்றை விரிவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+