சத்ய நாதெல்லா முதலீடு செய்துள்ள Groww நிறுவனம்: விரைவில் ஐபிஓ வெளியீடு.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் ஆதரவு பெற்ற ஃபின்டெக் நிறுவனமான குரோவ் (Groww), அடுத்த வாரத்திற்குள் IPO விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் $650 மில்லியன் முதல் $800 மில்லியன் வரை நிதியைத் திரட்ட குரோவ் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளை எளிமையாக்கிய ஒரு நிறுவனம் தான் குரோவ். இந்த செயலியை பதவிறக்கம் செய்து கொண்டால் நாம் எளிமையாக வர்த்தகம் செய்யலாம். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு முதலீட்டு தளமாக இது இருக்கிறது.

சத்ய நாதெல்லா முதலீடு செய்துள்ள Groww நிறுவனம்: விரைவில் ஐபிஓ வெளியீடு.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

குரோவ் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா முதலீடு செய்துள்ளார் ,மேலும் நிறுவன ஆலோசகராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். $8 பில்லியன் வரையிலான சந்தை மதிப்பீட்டை எட்ட குரோவ் நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. இந்த மதிப்பீடு உறுதி செய்யப்பட்டால், குரோவ் இந்தியாவின் மிகப்பெரிய பங்குத் தரகு நிறுவனமாக மாறும் எனத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ஏஞ்சல் ஒன் லிமிடெட் சுமார் $2.3 பில்லியன் சந்தை மதிப்புடன் முக்கிய போட்டியாளராக உள்ளது.

குரோவ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பில்லியன்ப்ரைன்ஸ் கேரேஜ் வென்ச்சர்ஸ் லிமிடெட் (Billionbrains Garage Ventures Ltd.), இந்த ஐபிஓ-வை தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. ஜேபி மோர்கன் , கோடக் மஹிந்திரா வங்கி, சிட்டி குரூப், ஆக்சிஸ் வங்கி மற்றும் மோதிலால் ஓஸ்வால் முதலீட்டு ஆலோசகர்கள் இந்த ஐபிஓ-வுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

ஐபிஓ-வின் அளவு மற்றும் வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளன. தேசிய பங்குச் சந்தையின் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதம் வரை குரோவ் நிறுவனத்திற்கு 12.07 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது தேசிய பங்குச் சந்தையின் மொத்த பயனர்களில் 26% ஆகும். குரோவில் முதலீடு செய்துள்ள மற்ற நிறுவனங்களில் பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ், ரிப்பிட் கேபிடல் மற்றும் டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் ஆகியவை அடங்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+