பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல பின்டெக் நிறுவனமான GROWW-வின் தாய் நிறுவனமான Billionbrains Garage Ventures தனது கனவு இலக்கான IPO-விற்கு செபியிடம் ஒப்புதல் பெற்று இன்று ஐபிஓ முதலீடுக்கான கதவுகளை திறந்துள்ளது. நவம்பர் 4 முதல் 7 வரை நடைபெறும் இந்த ஐபிஓ, முதலீட்டாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
GROWW நிறுவனம் இந்த ஐபிஓ-வில் வெளியிடும் பங்குகளின் விலையை ரூ.95 முதல் ரூ.100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஐபிஓ-வில் மொத்தம் ரூ.6,632.30 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது Billionbrains Garage Ventures நிர்வாகம்.

இந்த ஐபிஓ-வில் புதிய பங்கு வெளியீடு மற்றும் OFS ஆகியவை இணைந்தது செயல்படக்கூடியது. இதில் ரூ.1,060 கோடி நிதியை புதிய பங்குகள் மூலமும், ரூ.5,572.30 கோடி OFS மூலமும் திரட்டப்படும். இந்த ஐபிஓ, க்ரோவ் நிறுவனத்தின் வளர்ச்சி பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
க்ரோவ் ஐபிஓவில் முதலீடு செய்வோருக்கு ஒரு லாட்-க்கு 150 பங்குகள் கிடைக்கும். முதலீட்டாளர்கள் லாட் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் ஒரு லாட்டின் மதிப்பு அதிகப்படியாக 15000 ரூபாய் வரையில் இருக்கும்.
இந்த ஐபிஓ-வில் பங்கு ஒதுக்கீடு அளவுகளை பார்க்கும் போது, 75 சதவீதம் பங்குகள் தகுதியான நிறுவன முதலீட்டாளர்களுக்கு (QIB), 15 சதவீதம் பங்குகள் அளவு நிறுவன அல்லாத முதலீட்டாளர்களுக்கு (NII), 10 சதவீதம் பங்குகள் ரீடைல் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
க்ரோவ் நிறுவனம், இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமான முதலீட்டு தளமாக உள்ளது. இந்த ஐபிஓ, நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கு நிதி அடித்தளமாக அமையும்.
க்ரோவ் நிறுவனத்தின் ஐபிஓ இன்று துவங்கியிருக்கும் வேளையில், இப்பங்குகள் கிரே மார்க்கெட்-டில் ரூ.17 என்ற விலையில் உள்ளது.
இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்தவர்களுக்கான ஒதுக்கீடு நவம்பர் 8 தேதியன்று நடக்கும். நவம்பர் 8 விடுமுறை என்பதால் முதலீட்டாளர்கள் நவம்பர் 10 அன்று பங்கு அலாட்மென்ட்-ஐ தனது டிமேட் கணக்கில் பெறுவார்கள். BSE மற்றும் NSEயில் நவம்பர் 12 அன்று பட்டியலிடப்பட்டு வர்த்தகம் நடக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications