ஐபிஓவுக்கு முன்பு 20 கோடி டாலர் நிதி திரட்ட பேச்சுவார்த்தை - GROWW மெகா திட்டம்..!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான லலித் கேஷ்ரே, ஹர்ஷ் ஜெயின், இஷான் பன்சால் மற்றும் நீரஜ் சிங் ஆகியோர் இணைந்து 2016ல் குரோவ் நிறுவனத்தை தொடங்கினர். குரோவ் நிறுவனம் முதலில் நேரடி மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தராக தனது வணிகத்தை தொடங்கியது. பின்பு படிப்படியாக தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தி வருகிறது.

தற்போது செயலில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய பங்கு தரகு நிறுவனமாக குரோவ் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. என்எஸ்இ-ன் தரவுகளின்படி, கடந்த பிப்ரவரியில் குரோவ்-ன் செயல்பாட்டில் உள்ள வர்த்தகர்களின் எண்ணிக்கை 1.30 கோடியாக உள்ளது.

ஐபிஓவுக்கு முன்பு 20 கோடி டாலர் நிதி திரட்ட பேச்சுவார்த்தை - GROWW மெகா திட்டம்..!

அதேசமயம் முன்னணி பங்கு தரகு நிறுவனமான ஜெரோதாவில் செயல்பாட்டில் உள்ள வர்த்தகர்களின் எண்ணிக்கை 80 லட்சம். ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ள வர்த்தகர்களின் எண்ணிக்கை 77 லட்சமாக உள்ளது. குரோவ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கு வசதியாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தனது இருப்பிடத்தை மாற்றியது. இந்நிறுவனம் அடுத்த சில மாதங்களில் தனது ஐபிஓவுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது இந்த சூழ்நிலையில், 20 கோடி டாலர் நிதி திரட்டுவது குறித்து மதிப்பீடு செய்து வருகிறது.

மேலும், சிங்கப்பூர் சர்வரிஜின் பண்ட் ஜிஐசி மற்றும் தற்போதைய முதலீட்டாளர் டைகர் குளோபல் ஆகிய நிறுவனங்களுடன் நிதி திரட்டல் தொடர்பாக குரோவ் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளது.

குரோவ் விரைவில் ஐபிஓ மேற்கொள்ள உள்ளதால், தற்போதைய நிதி திரட்டல் நடவடிக்கை விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் (நிதி திரட்டல்) பெங்களூருவை தளமாக கொண்ட ஸ்டார்அப்பின் (குரோவ்) மதிப்பை சுமார் 650 கோடி டாலராக மாற்றும்.

கடைசியாக 2021ல் குரோவ் நிறுவனம் நிதி திரட்டலில் ஈடுபட்டது. அப்போது நிறுவனத்தின் மதிப்பு 300 கோடி டாலராக கணக்கிடப்பட்டது. குரோவ் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் 70 கோடி டாலர் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரோவ் நிறுவனம் கடந்த 2024 நிதியாண்டில் வருவாயாக ரூ.3,145 கோடி ஈட்டியது. இருப்பினும், இந்தியாவுக்கு தளத்தை மாற்றியதற்காக அமெரிக்க ஆணையங்களுக்கு ஒரு முறை வரியாக கணிசமான தொகை செலுத்தியதால் அந்த ஆண்டில் ரூ.805 கோடி நிகர இழப்பை சந்தித்தது.

பங்கு தரகு நிறுவனங்கள் தங்களது வருவாயில் 70 சதவீதத்துக்கும் கூடுதலாக F&O வர்த்தகங்கள் வாயிலாக வருகிறது. இந்நிலையில், செபி, அண்மையில் F&O வர்த்தகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக பங்கு தரகு நிறுவனங்களின் வருவாய் குறைந்தது.

இதன் எதிரொலியாக, குரோவ் நிறுவனம் தனது சேவைகளை பல்வகைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் வெல்த் மேலாண்மை நிறுவனமான ஃபிஸ்டம் நிறுவனத்தை கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியது குறி்ப்பிடத்தக்கது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+