சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று தான் குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (ஜி.எம்.டி.சி.). குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது.
மேலும் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயமும் அளித்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 143.67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 203 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும் கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 2.10 சதவீதம் குறைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதியன்று ஜி.எம்.டி.சி. பங்கு விலை 52 வார புதிய உச்சமான ரூ.505.00ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை சரிய தொடங்கியது.
இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு செய்தியால் இப்பங்கின் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. குஜராத்தில் மின் தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் அம்மாநிலத்தில் உச்சகட்ட தேவை 24,544 மெகா வாட்டாக இருந்தது.
இது 2031-32ம் நிதியாண்டில் 36,000 மெகா வாட்டை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஜி.எம்.டி.சி. நிறுவனம் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அந்த மாநிலத்தில் லிக்னைட் சுரகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும், குஜராத்தில் உள்ள நிலக்கரி அடிப்படையிலான மற்றும் லிக்னைட் அடிப்படையிலான மின் நிலையங்களை மேம்படுத்த குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் (ஜி.யு.வி.என்.எல்.) நிறுவனத்துடன் ஜி.எம்.டி.சி. கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து இந்நிறுவன பங்கு ஏற்றம் காண தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஜி.எம்.டி.சி. பங்கின் விலை ரூ.399.25ல் முடிவுற்றது. இந்நிலையில் நேற்று இந்நிறுவன பங்கின் விலை 0.46 சதவீதம் உயர்ந்து ரூ.401.10ல் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே பங்கு விலை ரூ.409.10 வரை உயர்ந்தது.
ஜி.எம்.டி.சி. நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் வலுவாக உள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.2,462.88 கோடி ஈட்டியுள்ளது. மேலும், அந்த நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.613.59 கோடி ஈட்டியுள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் நிறுவனம் லாபமாக ரூ.204.12 கோடி ஈட்டியிருந்தது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.750.75 கோடியாக உயர்ந்தது. பொதுத்துறை நிறுவனங்களில் தொடர்ந்து நல்ல லாபம் மற்றும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களில் ஜி.எம்.டி.சி. நிறுவனமும் ஒன்று. மேலும் வருங்காலத்தில் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Subramanian
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications