மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற அரசு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த இரண்டு பங்குச்சந்தை அமர்வுகளில் 10% வரை குறைந்துள்ளன. திடீரென இந்த பங்கு சரிவதற்கு காரணம் என்ன தரகு நிறுவனங்கள் இந்த பங்கு குறித்து தெரிவிப்பது என்ன என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அண்மை காலமாகவே பொதுத்துறை நிறுவனங்களை சார்ந்த பங்குகள் கணிசமான அளவு வளர்ச்சியை தந்துள்ளன. அதில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் ஒன்று. இந்த நிலையில் அண்மையில் தரகு நிறுவனமான இன்கிரெட் ( InCred ) பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட HAL போன்ற நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பீட்டில் சிக்கல் இருப்பதாக தெரிவித்திருந்தது.

HAL நிறுவனத்தையும் சர்வதேச அளவிலான பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து தரக்கூடிய டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் மதிப்பீட்டையும் இன்கிரெட் நிறுவனம் ஒப்பிட்டு ஆய்வு செய்திருந்தது.
இதன்படி கடந்த நிதியாண்டில் டஸால்ட் நிறுவனத்தின் வருமானம் 5.19 பில்லியன் டாலர்கள் அதில் லாபம் 974 மில்லியன் டாலர்கள் அதே வேளையில் HAL நிறுவனத்தின் வருமானம் 3.67 பில்லியன் டாலர்கள் வருமானம் 921 மில்லியன் டாலர்கள்.
அடுத்த இரண்டு ஆண்டு காலத்தில் டஸால்ட் நிறுவனத்தின் வருமானம் 24 சதவீதம் மற்று HAL நிறுவனத்தின் வருமானம் 13 சதவீதம் உயரும் என இன்கிரெட் நிறுவனம் கூறியுள்ளது. 2023 ஆம் ஆண்டு இறுதியில் டஸால்ட் நிறுவனம் 41 பில்லியன் மதிப்பிலான ஆர்டர்களையும், HAL நிறுவனம் 11 பில்லியன் மதிப்பிலான ஆர்டர்களையும் கொண்டு இருந்தது என இன்கிரெட் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கை வெளியானதை அடுத்து HAL நிறுவனத்தின் பங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை 3 சதவீதம் என்ற அளவிலும் வியாழக்கிழமை(ஜூலை 18) 6 சதவீதம் என்ற அளவிலும் சரிவை கண்டுள்ளது. அதாவது ஒரு பங்கு 5,015 ரூபாய் என வர்த்தகம் ஆனது. இருந்தாலும் இன்கிரெட் நிறுவனத்தை சேர்ந்த 16 ஆய்வாளர்களில் 14 பேர் இந்த பங்கினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளனர்.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனத்தில் சிறு முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 2 லட்சம் ரூபாய்க்கும் கீழ் மூலதனம் கொண்டிருக்க கூடிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை என்பது மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 60% அதிகரித்துள்ளது.
அதே வேளையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் தங்களுடைய பங்குகளை 6.75 சதவீதத்திலிருந்து 5.8 என குறைத்துக் கொண்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இந்த நிறுவனத்தில் தங்கள் பங்குகளை 12.42 சதவிகிதத்திலிருந்து 11.68 என குறைத்துள்ளன. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த பங்கு 80 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications