அகமதாபாத்தினை தலைமையிடமாகக் கொண்ட ஹர்ஷா இன்ஜினியர்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்கு வெளியீடானது, வரவிருக்கும் செப்டம்பர் 14 அன்று தொடங்கவுள்ளது.
இந்த பங்கு வெளியீடானது செப்டம்பர் 16 அன்று முடிவடையவுள்ளது.
பேரிங் கேஜ் நிறுவனமான இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 455 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்படலாம். இதே ஏற்கனவே உள்ள பங்குதாரர்களாக உள்ள முதலீட்டாளர்கள் மூலம் 300 கோடி ரூபாய் வரையில் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிஆது.
OFS மூலம் விற்பனை
இந்த OFS-ன் பகுதியாக நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரதார்கள் குழுக்கள், ராஜேந்திரா ஷா, ஹரிஷ் ரங்வாலா மற்றும் நிர்மலா ஷா உள்ளிட்டோர் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுஇறது. இந்த பங்கு வெளியீட்டில் OFS மூலம் தகுதியுள்ள ஊழியர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வது முறை வெளியயீடு திட்டம்
இந்த பங்கு வெளியீட்டினை இரண்டாவது முறையாக வெளியிட களமிறங்கியுள்ளது. கடந்த 2018-லியே டிராப்ட் பேப்பர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ஐஎல் & எஃப் எஸ் நெருக்கடி காரணமாக அந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. இது NBFC துறையையும் உலுக்கி எடுத்தது.
ஐபிஓ விலை நிலவரம்
ஹர்ஷா இன்ஜினியர்ஸ் நிறுவனம் அதன் பங்கு வெளியீட்டில் 314 - 330 ரூபாயாக பங்கு விலையினை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த மொத்த பங்கு வெளியீட்டில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு 35% பங்கும், 15% நிறுவனமற்ற முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
லாட் சைஸ் எவ்வளவு?
முதலீட்டாளர்கள் 45 ஈக்விட்டி பங்குகளும், அதன் பிறகு 45ன் மடங்கிலும் வாங்கலாம்.
ஹர்ஷா இன்ஜினியர்ஸ் ஐபிஓ கிரே மார்கெட்டில் பிரீமியம் 200 ரூபாயாக உள்ளது. இது 330 + 200 ரூபாயாக - 530 ரூபாயாக பட்டியலிடலாம் என்றும் கிரே மார்கெட் நிலவரப்படி எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபிஓ விலையில் இருந்து 60% அதிகமாகும். ஐபிஓ-வின் அதிகபட்ச விலை வரம்பு 330 ரூபாயாகும்.
நிபுணர்களின் எதிர்பார்ப்பு?
இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான வருவாய் விகிதம் இந்தியாவுக்கு வெளியே இருந்து வருகின்றன. மூலோபாய ரீதியாக அமைந்துள்ள உற்பத்தி வசதிகள், சந்தையில் உள்ள செலவினங்கள் உள்ளிட்ட பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் தொடர்ந்து அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது.
வருவாய் விகிதம்
இது குஜராத்தில் அகமதாபாத்திற்கு அருகில் உள்ள சங்கோதர் மற்றும் மொரையாவில் இரண்டு முக்கிய இரண்டு வசதிகளுடன் ஐந்து உற்பத்தி வசதிகளை நிறுவனம் கொண்டுள்ளது. இதற்கிடையில் கடந்த நிதியாண்டில் இதன் வருவாய் விகிதம் 51.24% அதிகரித்து, 1321.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வரிக்கு பிந்தைய இதன் லாபமும் இருமடங்கு அதிகரித்து, 91.94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications