பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் மட்டுமே நல்ல லாபம் பார்க்க முடியும் என்று பல்வேறு பங்குச் சந்தை நிபுணர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் அடிக்கடி அழுத்தம் திருத்தமாக கூறுவதை கேட்டு இருப்போம். ஸ்மால் கேப் பங்கான ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கொடுத்த ஆதாயத்தை பார்த்தால் அது உண்மைதான் என்பதை நாம் உணர்வோம். ஒரு காலத்தில் பென்னி பங்காக இருந்த இந்நிறுவன பங்கு இன்று மல்டிபேக்கர் பங்காக உருவெடுத்துள்ளது. 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 23,800 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் நிறுவன பங்கின் விலை 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.50 என்ற அளவில் இருந்தது. ஆனால் அதன் பிறகு இந்நிறுவன பங்கின் விலை யாரும் எதிர்பாராத அளவுக்கு உயர தொடங்கியது.இந்நிறுவன பங்கின் விலை ரூ.350ஐ தாண்டி விட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலீட்டாளர் இந்நிறுவன பங்குகளில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் இன்று அது ரூ.2.36 கோடியாக உயர்ந்திருக்கும். கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு 160 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு விலை ரூ.138.50லிருந்து ரூ.354ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்நிறுவன பங்கு ரூ.1.50லிருந்து ரூ.354ஆக உயர்ந்துள்ளது. இந்த காலத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 236 மடங்கு லாபம் கொடுத்துள்ளது.

ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து நல்ல லாபம் ஈட்டி வருகிறது. உதாரணமாக கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.80.63 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அதே காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.10.29 கோடியை சம்பாதித்துள்ளது. மேலும், கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் நிறுவனம் வருவாயாக ரூ.775.81 கோடியும், நிகர லாபமாக ரூ.45.58 கோடியும் ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.357ஆக இருந்தது.
ஒரு மாதத்துக்கு முன் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.02 லட்சமாக உயர்ந்திருக்கும். ஓராண்டுக்கு முன்பு முதலீட்டாளர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2.60 லட்சமாக வளர்ந்திருக்கும். 5 ஆண்டுக்கு முன் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2.36 கோடியாக உயர்ந்திருக்கும். நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதற்கு இந்நிறுவன பங்குகளின் கடந்த கால விலை உயர்வு நிகழ்வே சாட்சி.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications