ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் (எச்எம்பிஎல்) நிறுவனம் உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது. 1992ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் ஒப்பந்த சேவைகளை வழங்குவதில் குறிப்பாக சாலை கட்டுமான திட்டங்களில் நல்ல பெயர் வாங்கிய நிறுவனமாகும்.
மேலும், இந்நிறுவனம் அரசாங்கத்தால் வழங்கப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு துணை ஒப்பந்ததாரராக அடிக்கடி பணியாற்றி வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது மற்றும் இந்நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கி வருவதால் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் பங்கு விலை ரூ.46.70 என்ற விலையில் தொடங்கியது. அன்றைய தினம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து, மகாராஷ்டிராவில் பிஜோரா டோல் பிளாசா அமைப்பதற்கான ஆர்டரை பெற்றுள்ளதாக ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் அறிவித்தது. இதனையடுத்து, அன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.48.37ஐ எட்டியது.
ரூ.50க்கும் குறைவான இந்த ஸ்மால்கேப் பங்கு 2022 பிப்ரவரியில் ரூ.9-10 என்ற அளவில்தான் சந்தையில் வர்த்தகமாகியது.ஆனால் தற்போது ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் பங்கின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 29,500 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் பங்கின் விலை ரூ.41.29ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 குறைந்தபட்ச விலையை காட்டிலும் 45 சதவீதம் அதிகமாக உள்ளது. 2024 மார்ச் 28ம் தேதியன்று இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.28.41க்கு சென்றது.
ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் நிறுவனம் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.56.76 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.3.14 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் வருவாய் சற்று குறைந்துள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications