இந்த 3 பங்குகள் உங்களிடம் இருக்கா.. இல்லாட்டி வாங்கி வைங்க.. 15% லாபம் கொடுக்கலாம்!
சமீப நாட்களாகவே இந்திய சந்தையானது மீண்டும் மீண்டு வரத் தொடங்கியுள்ளது.. தொடர்ந்து அன்னிய முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக நிஃப்டி 50 17,100 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலை உடைத்துள்ளது. அடுத்ததாக 18,000-ஐ உடைக்கலாம் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நீண்டகால நோக்கிலும், நடுத்தர காலத்திலும் இந்திய சந்தைகள் வலுவாக ஏற்றம் காணலாம் எனும் விதமாக காணப்படுகின்றன.
எனினும் சர்வதேச சந்தையில் பெரியளவில் கரெக்ஷன் இருந்தால், அதனால் சந்தையில் தாக்கம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்கலாம்
இதற்கிடையில் அடுத்த 2 - 3 வாரங்களில் 3 பங்குகளின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் ஒன்று ஹெச் சி எல் டெக்னாலஜி
பயோகான்
பாலி கேப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.
ஹெச்சிஎல் டெக்னாலஜி
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜி சமீபத்திய காலாண்டுளாக தொடர்ந்து வலுவான வளர்ச்சியினை பதிவு செய்து வருகின்றது. இது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கிறது. இதற்கிடையில் டெக்னிக்கலாகவும் இப்பங்கின் விலை அதிகரிக்கலாம் என தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. இதன் LTP - 980 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் 910 ரூபாய்கும். இதன் இலக்கு விலை 1100 ரூபாயாகவும் கணித்துள்ளது. இது 12% லாபம் கொடுக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
பாலிகேப் இந்தியா
பாலிகேப் இந்தியா பங்கின் LTP - 2457.60 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் - 2250 ரூபாயாகும். இதன் இலக்கு விலை - 2675 ரூபாயாகவும் கணித்துள்ளது. இது 9% லாபம் கொடுக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
இது மீடியம் டெர்ம் மற்றும் நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாக டெக்னிக்கலாக காணப்படுகின்றது. 20 நாள், 50 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பயோகான்
பயோகான் இந்தியாவின் மிகப்பெரிய பார்மா துறை சார்ந்த நிறுவனமாகும். கடந்த மூன்று வாரங்களாகவே ஒரு ரேஞ்சில் வர்த்தகமாகும் இந்த நிறுவனம், மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இப்பங்கின் LTP - 317 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் - 298 ரூபாயாகும். இதன் இலக்கு விலை - 365 ரூபாயாகவும் கணித்துள்ளது. இது 15% லாபம் கொடுக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications