நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கி எச்டிஎஃப்சி வங்கி லிமிடெட். இதனுடைய ஒரு பிரிவு அல்லது துணை நிறுவனம் எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ். இந்நிறுவனம் வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில் 94.6 சதவீத பங்குகளை எச்டிஎஃப்சி வங்கி வைத்திருக்கிறது. 2025 செப்டம்பருக்குள் பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்று ரிசர்வ வங்கி உத்தரவிட்டு இருந்தது.
ஆவணங்கள்
இதனையடுத்து, எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டி்ல் களமிறங்க தேவையன நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஐபிஓ மேற்கொள்ள அனுமதி வேண்டிய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தது. செபி இந்நிறுவனத்தின் ஐபிஓ ஆவணங்களை பரிசீலனை செய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் , செபியிடமிருந்து அதன் ஐபிஓவுக்கான அனுமதியை பெறுவதற்கு நெருக்கமாக உள்ளது. இன்னும் சில தினங்களில் எச்டிபி நிறுவனத்தின் ஐபிஓவுக்கு ஐபிஓவுக்கு செபி அனுமதி அளிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் 150 கோடி டாலர் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் மோட்டார்
எச்டிபி பைனான்ஸ் சர்வீசஸ் ஐபிஓ மூலம் 150 கோடி டாலர் திரட்டுவது, ஷேடோ வங்கிக்கு நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ ஆக இருக்கும். கடந்த ஆண்டு ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் திரட்டிய330 கோடி டாலர் மதிப்பிலான ஐபிஓவுக்கு பிறகு, அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய ஐபிஓவாக எச்டிபி பைனான்ஸ் சர்வீசஸின் ஐபிஓ இருக்கும். அடுத்த மாதம் வருங்கால முதலீட்டாளர்களுடன் ஈடுபடும் செயல்முறையை தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தென்கொரியாவின் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது இந்திய நிறுவனத்தின் ஐபிஓவை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்தியாவின் மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர வரியால் தூண்டப்பட்ட சந்தை கொந்தளிப்பு போன்ற காரணங்களால் அதன் ஐபிஓ பணிகளை தற்காலிக நிறுத்தி வைத்துள்ளது.
டாடா கேபிட்டல்
டாடா சன்ஸின் துணை நிறுவனம் டாடா கேபிட்டல். இந்நிறுவனம் ஒரு நிதி மற்றும் முதலீட்டு சேவை நிறுவனமாகும். டாடா கேபிட்டல் நிறுவனம் அண்மையில், 200 கோடி டாலர் மதிப்பிலான ஐபிஓ மேற்கொள்ள அனுமதி வேண்டி செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தது.
நிழல் வங்கி (ஷேடோ வங்கி) என்பது பாரம்பரிய வணிக வங்கிகளை போன்ற செயல்பாடுகளை செய்யும் வங்கி அல்லாத நிதி இடைத்தரகரை குறிக்கிறது. அவை ஒழுங்குமுறை மேற்பார்வைக்கு உட்பட்டவை அல்ல.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications