இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கி, அதன் பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கவும், ஒரு பங்குக்கு ரூ. 5 சிறப்பு ஈவுத்தொகை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. இது வங்கியின் முதல் போனஸ் பங்கு வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. 2026 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளுடன் இந்த அறிவிப்பு வெளியானது.
போனஸ் பங்குகளைப் பெற தகுதியுள்ள பங்குதாரர்களைத் தீர்மானிக்க, ஆகஸ்ட் 27, 2025 அன்று பதிவு தேதியாக (Record Date) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போனஸ் பங்கு என்பது ஒரு நிறுவனம் தனது தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் விகிதத்தில் கூடுதல் பங்குகளை இலவசமாக வழங்குவதாகும்.

ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில், "2025 ஜூலை 19 ஆம் தேதி நாங்கள் வெளியிட்ட அறிவிப்பில், வங்கியின் இயக்குநர்கள் குழு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பதிவு தேதியான 2025 ஆகஸ்ட் 27 அன்று ஒரு பங்கு வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குதாரருக்கும் ஒரு போனஸ் பங்கு வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கியின் நிர்வாக உறுப்பினர்களிடமிருந்து ஒப்புதல்கள் தேவை.
நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE) பட்டியலிடப்பட்டுள்ள ஹெச்டிஎஃப்சி வங்கியின் அமெரிக்க டெபாசிட்டரி பங்குகள் (ADS) குறித்த அறிவிப்பும் வெளியானது. போனஸ் பங்கு வெளியீட்டிற்குப் பிறகும், ஒரு ADS மூன்று சாதாரண பங்குகளை (ஒரு ரூபாய் முகமதிப்பு கொண்டவை) இணையைகும், மேலும் தற்போதைய மாற்ற விகிதத்தை தொடர்ந்து பராமரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த போனஸ் வெளியீட்டை பிரதிபலிக்கும் வகையில், ஹெச்டிஎப்சி வங்கி தனது ADS டெபாசிட்டரியான JP மோர்கன் சேஸ் வங்கி N.A. க்கு, மொத்த ADS எண்ணிக்கையை 1:1 விகிதத்தில் அதிகரிக்க உத்தரவிடும். இந்த அறிவிப்பு மூலம் ADS வைத்திருப்பவர்கள் சாதாரண பங்குகளுக்கு இணையாக போனஸ் பங்குகளின் பலன் கிடைக்கும்.
இதை தொடர்ந்து நடப்பு நிதியாண்டு 2025-26-க்கான ஒரு பங்குக்கு ரூ. 5 சிறப்பு ஈவுத்தொகையையும் ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ஈவுத்தொகைக்கான பதிவு தேதியாக 2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை நிர்ணயிக்கப்பட்டது. தகுதியுள்ள பங்குதாரர்கள் இந்த சிறப்பு இடைக்கால ஈவுத்தொகை 2025 ஆகஸ்ட் 11, திங்கட்கிழமை அன்று வழங்கப்படும்.
வங்கியின் ஒழுங்குமுறை அறிக்கையில், "2025-26 நிதியாண்டிற்கான ஒரு ரூபாய் முகமதிப்பு கொண்ட ஒரு பங்குக்கு ரூ. 5 (அதாவது 500%) சிறப்பு இடைக்கால ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 12.24% அதிகரித்து ரூ. 18,155.21 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5.4% உயர்ந்து ரூ. 31,439 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 29,839 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ. 16,174.75 கோடியாக இருந்தது. இருப்பினும், ஒருங்கிணைந்த அடிப்படையில், 2025 ஜூன் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 1.31% குறைந்து ரூ. 16,258 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ. 16,475 கோடியாக இருந்தது.
ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 99,200 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 83,701 கோடியாக இருந்தது. பங்குச் சந்தை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, மொத்த செலவினம் ரூ. 63,467 கோடியாக இருந்தது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 59,817 கோடியாக இருந்தது.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!



Click it and Unblock the Notifications