வங்கி பங்குகள் இனி 46% வரை உயருமாம்.. உங்களிடமும் இந்த பங்குகள் உள்ளதா..?

பங்குச் சந்தையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின் தனியார் துறை வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து வருகின்றன. சமீபகாலமாக தனியார்துறை வங்கி பங்குகள் சற்று அழுத்தத்தில் உள்ளன. இருப்பினும், இந்தக் காலகட்டத்திலும் சில வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களின் செல்வத்தை அதிகரித்தன. எனவே, தற்போது சாதகமான ஏற்றத்தைக் காட்டி வரும் ஐந்து முக்கிய வங்கிகளின் பங்குகள், வரும் நாட்களில் 46 சதவீதம் வரை உயரும் அறிகுறிகள் தென்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதில் HDFC வங்கி மற்றும் நான்கு பெரிய தனியார் வங்கிகளின் பங்குகளும் அடங்கும்.

HDFC வங்கி
வரும் நாட்களில் ஹெச்டிஎப்சி வங்கியின் பங்கு விலை 46 சதவீதம் வரை உயரலாம் என 40 ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த பங்கு மீதான வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். அதேபோல், கடந்த வாரத்தில் பங்கு விலை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது பங்கின் விலை ரூ. 1,755-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 13.40 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாகும்.

வங்கி பங்குகள் இனி 46% வரை உயருமாம்.. உங்களிடமும் இந்த பங்குகள் உள்ளதா..?

இண்டஸ் இண்ட் வங்கி
42 ஆய்வாளர்கள் வரும் நாட்களில் இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் 35.8 சதவீதம் வரை உயரும் என கணித்துள்ளனர். எனவே, இந்த பங்கிற்கும் வாங்குதல் மதிப்பீட்டை கொடுத்துள்ளனர். கடந்த மாதத்தில் பங்கு 7.2 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது ரூ. 1,468-ல் வர்த்தகமாகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1.14 லட்சம் கோடியாக உள்ளது.

ஆக்சிஸ் வங்கி
39 ஆய்வாளர்கள், வரும் நாட்களில் ஆக்சிஸ் வங்கியின் பங்கு விலை 24.5 சதவீதம் உயரும் என கணித்துள்ளனர். இந்த பங்கிற்கும் வாங்கும் மதிப்பீட்டை கொடுத்துள்ளனர். கடந்த மாதத்தில் பங்கு விலை 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது ரூ. 1,242-ல் வர்த்தகமாகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.84 லட்சம் கோடியாக உள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி
37 ஆய்வாளர்கள் வரும் நாட்களில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை 20.8 சதவீதம் உயரும் என கணித்துள்ளனர். வாங்குதல் மதிப்பீட்டை கொடுத்துள்ளனர். கடந்த மாதத்தில் பங்கு விலை 5.5 சதவீதம் அதிகரித்த பங்கு தற்போது ரூ. 1,922-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.82 கோடியாக உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி
39 ஆய்வாளர்கள் வரும் நாட்களில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 20.3 சதவீதம் உயரும் என கணித்து வாங்கும் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் பங்கு விலை 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது ரூ. 1,318-ல் வர்த்தகமாகி வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 9.28 லட்சம் கோடியாக உள்ளது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+