HDFC வங்கியின் பங்கு விலை திங்கள்கிழமை 1% க்கும் அதிகமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இதன் மூலம், ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.14 லட்சம் கோடியை மீண்டும் தொட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்த தடாலடி உயர்வுக்கு முக்கியமான காரணம் இன்று நடந்த முக்கியமான பிளாக் டீல்.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 21.7 லட்சம் HDFC வங்கி பங்குகள் பிளாக் டீல் மூலம் வர்த்தகமாகின. இந்த பிளாக் டீல் மூலம் யார் வாங்கினார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை என்றாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் இது பெரும் நம்பிக்கையை அளித்தது. இந்த 21.7 லட்சம் பங்குகளை நேற்றைய வர்த்தகம் மூடும் போது பதிவான 1804.70 ரூபாய் விலையின் அடிப்படையில் விற்கப்பட்டு இருந்தால் இதன் மதிப்பு ரூ.392 கோடியாகும்.

இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 1.38 சதவீதம் உயர்வுடன் 1829.50 ரூபாயாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 1837 ரூபாய் வரையில் உயர்ந்து 52 வார உச்ச விலையைப் பதிவு செய்துள்ளது. ஆனால் தற்போது 52 வார உச்ச விலையில் இருந்து கீழ் இறங்கியுள்ளதால் ஹெச்டிஎப்சி-யின் சந்தை மதிப்பு 13.98 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதேபோல் MSCI இன்ஜெக்ஸ் மறுசீரமைப்பில் HDFC வங்கியின் வெயிட்டேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் $1.9 பில்லியன் அளவிலான பாசிவ் முதலீடுகள் வரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதும், இன்றைய உயர்வுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. வங்கியின் வலுவான நிதி நிலைமை மற்றும் சந்தையில் அதன் ஆதிக்கம் ஆகியவையும் பங்கு விலையை உயர்த்தியுள்ளது.
செப்டம்பர் காலாண்டில் HDFC வங்கியின் நிகர லாபம் 5.3% அதிகரித்து ரூ.16,821 கோடி பதிவு செய்துள்ளது. நிகர வட்டி வருவாய் 10% அதிகரித்து ரூ.30,110 கோடியாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications