இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 509.41 புள்ளிகள் அல்லது 0.66 சதவீதம் அதிகரித்தது. கடந்த மார்ச் 26ம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி கேஓய்சி தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.75 லட்சம் அபராதம் விதித்தது.
இது இந்நிறுவன பங்கின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் 5 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில் எச்டிஎஃப்சி வங்கி பங்கு விலை சுமார் ரூ.25 உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் எச்டிஎஃப்சி வங்கி பங்கு விலை ரூ.1,825.50ஆக இருந்தது. கடந்த வாரத்தில் மட்டும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.44,934 கோடி அதிகரித்தது. இன்றைய மோசமான வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 3.21 சதவீதம் சரிந்து 1769.85 ரூபாயாக உள்ளது.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் 8 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.88,085.89 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்போசிஸ் உள்பட 2 நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.11,098 கோடி குறைந்துள்ளது.
கடந்த வார இறுதியில் மும்பை பங்குச் சந்தையில் இன்போசிஸ் பங்கின் விலை ரூ.1,570.40ஆக இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ.1,275ஆக இருந்தது. டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் எச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ்,பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
கடந்த வாரம் எச்டிஎஃபிசி வங்கி பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.13.99 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பங்குகளின சந்தை மதிப்பு ரூ.16,599.79 கோடி உயர்ந்து ரூ.6.88 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.9,136 கோடி குறைந்து ரூ.6.52 லட்சம் கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,962 கோடி சரிந்து ரூ.17.25 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
2025-26ம் நிதியாண்டின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான நிலையற்ற தன்மை உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. வங்கி மற்றும் ஐடி துறையை சேர்ந்த பங்குகள் பலத்த அடி வாங்கின.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications