Buy or Sell stocks: சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், இந்திய பங்கு சந்தையானது வலுவான ஏற்றத்தினை கண்டு முடிவடைந்துள்ளது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று வலுவான ஏற்றத்தினை கண்டுள்ளது.
குறிப்பாக நிஃப்டி 50 குறியீடானது 279 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 17,359 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இதே சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம் கண்டு,, 58,991 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே பேங்க் நிஃப்டி 698 புள்ளிகள் அதிகரித்து, 40,608 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
ஏற்றம் தொடரலாம்
இதே ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் குறியீடுகளானது நல்ல ஏற்றத்திலும் முடிவடைந்துள்ளது. ஆசிய சந்தைகளிலும் அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இதன் எதிரொலி இந்த சந்தையிலும் காணப்பட்டது. இதற்கிடையில் இந்த வலுவான போக்கானது வரும் வாரத்திலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 பங்குகள்
ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிஃப்டியின் உடனடி முக்கிய லெவல் 17,200 ஆகவும், இதே சப்போர்ட் லெவல் 17,050 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. நிஃப்டி மற்றும் பேங்க் நிப்டி என இரண்டுமே வலுவான லெவலை உடைத்துள்ள நிலையில், இந்த வாரத்தில் ஹெச் டி எஃப் சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஜே.எஸ். டபள்யூ ஸ்டீல், பெடரல் வங்கி, பெல் உள்ளிட்ட 5 பங்குகள் அடுத்த வாரம் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச் டி எஃப் சி வங்கி
தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஹெச் டி எஃப் சி வங்கி கடந்த வாரத்தில் அதன் முக்கிய லெவலை கடந்துள்ளது. இது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தான் தரகு நிறுவனம் வரும் வாரத்தில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்று கணித்துள்ளது. இதன் வார இலக்கு விலையானது 1660 ரூபாயினை எட்டலாம் என கணித்துள்ளது. இதற்கு ஸ்டாப் லாஸ் ஆக 1574 ரூபாயினை கணித்துள்ளது.
ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல்
தனியார் துறையை சேர்ந்த முக்கிய மெட்டல் நிறுவனமான ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், 4 வாரங்களுக்கு பிறகு ஏற்றம் காணலாம் என்ற நிலையில் காணப்படுகிறது. இது தொடர்ந்து சீனாவில் தேவையானது அதிகரித்து வரும் சூழலில், தொடர்ந்து வலுவான ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்கு விலையாக 750 ரூபாயாக அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. ஸ்டாப் லாஸ் ஆக 654 ரூபாயினை தரகு நிறுவனம் கணித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி பங்கு விலையானது ஒரு மாத உச்சத்தினை தொட்ட நிலையில், இப்பங்கானது இன்னும் தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத ன் ஒரு வார இலக்கு விலையாக 940 ரூபாயாக தரகு நிறுவனம் கணித்துள்ளது. ஸ்டாப் லாஸ் அக 835 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது.
பெல்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விலையானது ஆறு வார உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து அதன் வால்யூம் என்பது அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முக்கிய பிரேக் லெவலையும் உடைத்துக் காட்டியுள்ளது. அல வரவிருக்கும் வாரத்தில் இப்பங்கு விலையானது நாளை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெல் இலக்கு விலையானது 110 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் ஆக 92 ரூபாயினையும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பெடரல் வங்கி
பெடரல் வங்கியானது கடந்த வாரம் முக்கிய பிரேக் அவுட் லெவலை உடைத்துள்ளது. சார்ட் பேட்டர்னிலும் வலுவான ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வலுவான இலக்கு விலையாக 150 ரூபாயினை எட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ஸ்டாப் லாஸ் ஆக 124 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications