இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி தன்னுடைய பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு பங்குக்கு ஒரு பங்கு என முதலீட்டாளர்கள் போனஸ் பங்குகளை பெற்றுள்ளனர். ஹெச்டிஎஃப்சி வங்கியில் 10 பங்குகளை வைத்திருந்தவர்களுக்கு இன்று முதல் அது 20ஆக மாறி இருக்கும்.
சந்தை மூலதனத்தில் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள், அதன் 1:1 போனஸ் பங்கு வெளியீட்டைச் செயல்படுத்திய பிறகு செவ்வாய்க்கிழமை அன்று பங்கு விலையில் மாற்றம் அடைந்திருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக பங்கின் விலை என்பது சரிவை சந்தித்துள்ளது. என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ-யில் எக்ஸ்-போனஸாக வர்த்தகம் தொடங்கியதால் இந்த மாற்றம் ஏற்பட்டது.

அதிகமானவர்கள் பங்கினை வாங்கி விற்பதை ஊக்கப்படுத்தவும், சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் பங்குதாரர்களுக்கு தற்போதுள்ள ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு கூடுதல் பங்கு வழங்கும் இந்த போனஸ் வெளியீட்டை ஹெச்டிஎஃப்சி நிறைவேற்றியுள்ளது.
இதனால் பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அதற்கேற்ப விலையும் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு முந்தைய இறுதி விலையை விட 62% குறைந்து ரூ 982.20 முதல் ரூ 986.30 வரை வர்த்தகமானது. இது போனஸ் விகிதத்தின் கணித விளைவாகும். வங்கியின் உள்ளார்ந்த மதிப்பில் ஏற்பட்ட சரிவு அல்ல.
இருப்பினும், இந்த கார்ப்பரேட் நடவடிக்கை சந்தை மூலதனத்தையோ அல்லது பங்குதாரர் மதிப்பையோ பாதிக்காது. இதில் பங்கு எண்ணிக்கைக்கேற்ப விலை சரிசெய்யப்படுகிறது. உதாரணமாக உங்களின் 10,000 ரூபாய் மதிப்புள்ள ஹெச்டிஎஃப்சி பங்குகள் நேற்று இருந்தது என்றால் இன்றும் மொத்த பங்குகளின் மதிப்பு அதே 10,000 ரூபாய் தான். இந்த 10,000 ரூபாய் மதிப்பு முன்பு 10 பங்குகளிடம் இருந்து 20 பங்குகளுக்கு பகிரப்பட்டுள்ளது. இதுவே ஒரு பங்கின் விலை குறைவாக இருப்பது போன்ற தோற்றத்துக்கு காரணம்.
நிறுவனத்தின் நீண்ட கால வருவாய் திறனில் உள்ள நம்பிக்கையின் அடையாளமாக போனஸ் வெளியீடுகள் பார்க்கப்படுகின்றன. ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு, இது அதன் மூலதன உத்தியின் தொடர்ச்சியாகும், இது பங்குகளை பரந்த முதலீட்டாளர் தளத்திற்கு அணுகக்கூடியதாக வைத்திருக்கிறது. முன்னதாக போனஸ் பங்குக்கான தகுதியான பங்குதாரர்களைத் தீர்மானிப்பதற்கான பதிவு தேதி ஆகஸ்ட் 26, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தேதிக்குள் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், தாங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு முழுமையாகச் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கைப் பெறத் தகுதியுடையவர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications