பிர்லாசாப்ட் பங்கின் விலை 20% அதிகரிக்கலாம்.. தரகு நிறுவனம் செம கணிப்பு.. வாங்கியிருக்கீங்களா?

கொரோனாவின் தாக்கத்தின் மத்தியிலும் வழக்கம்போல ஒரு துறையானது செயல்பட்டு கொண்டிருந்தது என்றால் அதில் ஐடி துறையும் ஒன்று. ஏனெனில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த நிலையில், தங்களுக்கு தேவையான பலவற்றையும் டிஜிட்டல் சேவை மூலமாகவே பெற விரும்பினர்.

இது ஐடி துறையில் வழக்கத்திற்கு மாறாக தேவையை ஊக்குவித்தது. சொல்லப்போனால் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்தது.

தற்போது கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்தாலும், கொரோனா போன்ற நெருக்கடியான காலக்கட்டங்களில் அது கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சிறு கடைகளாக இருந்தாலும், ஆன்லைன் ஆஃப்லைன் இரண்டிலும் சேவை செய்ய ஆரம்பித்து விட்டன. இது சில்லறை வர்த்தகம் மட்டும் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் மாற்றமானது வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது.

25% அதிகரிப்பு

25% அதிகரிப்பு

இதற்கிடையில் தான் கடந்த சில காலாண்டுகளாகவே ஐடி நிறுவனங்கள் வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. இதனால் ஐடி நிறுவன பங்குகளும் தொடர்ந்து உச்சம் தொட ஆரம்பித்துள்ளன. இந்த காலக்கட்டத்தில் பிர்லாசாப்ட் பங்கு விலையும் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இப்பங்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் 380 ரூபாயினை தொட்டிருந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு 470 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த குறுகிய காலகட்டத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 25% அதிகரித்துள்ளது.

இலக்கு

இலக்கு

இப்பங்கின் விலையானது ஏற்கனவே அதிகரித்து காணப்பட்டாலும், இன்னும் அதிகரிக்கலாம் என்றே ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலை குறுகிய காலத்தில் 520 ரூபாயினை தொடலாம் என கணித்துள்ளது. இதே அடுத்த ஒரு காலாண்டில் 570 ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளது. இது தற்போதைய லெவலில் இருந்து 20% அதிகமாகும்.

வலுவான டெக்னிக்கல்

வலுவான டெக்னிக்கல்

பிர்லாசாப்டின் வலுவான சப்போர்ட் விலையானது 380 ரூபாய் இருந்தது. இது கடந்த பிப்ரவரியில் அதன் குறைந்தபட்ச விலையை எட்டிய நிலையில், வலுவாக மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆக இதனால் இதன் தற்போதைய உச்சமான 470 ரூபாய் என்ற விலையினை உடைக்கலாம். இதன் டெக்னிக்கல் பேட்டர்னும் வலுவாக காணப்படுகின்றது. குறிப்பாக இதன் 20 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக காணப்படுகின்றது. RSI-ம் மேலாக அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எப்போது வாங்கலாம்?

எப்போது வாங்கலாம்?

இப்பங்கினை 465 - 480 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் ஸ்டாப் லாஸ் ஆக 440 ரூபாயாக வைத்துக் கொள்ளலாம் என இந்த தரகு நிறுவனம் கணித்துள்ளது. இதில் குறுகிய காலத்தில் 520 ரூபாயினையும், நீண்டகால நோக்கில் 570 ரூபாயாகவும் இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

பிர்லாசாப்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று என்எஸ்இ-யில் 1.13% அதிகரித்து, 471.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 477.50 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 467 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 585.85 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 215.90 ரூபாயாகும்.

இதே பிஎஸ்இ-ல் இப்பங்கின் விலையானது 1.01% அதிகரித்து, 471.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 477.45 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 467 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 585.85 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 238.45 ரூபாயாகும்.

Disclaimer: This recommendations made above are those of individual analysts or broking companies, and not for good returns

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+