பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமா.. இந்த 3 பங்கினை பாருங்க.. தரகு நிறுவனம் அட்டகாசமான கணிப்பு!

உலக அளவில் பங்கு சந்தைகளில் அதிகளவில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தாலும், கடந்த சில அமர்வுகளாகவே இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து நல்ல ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

அன்னிய முதலீடானது இந்திய சந்தையில் மீண்டும் திரும்ப தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல நல்ல நிறுவனங்களின் பங்கு விலையானது நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன.

அந்த வகையில் 2- 3 வாரங்களில் வாங்கி நல்ல லாபம் பார்க்கலாம் என ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது.

என்னென்ன பங்குகள்?

என்னென்ன பங்குகள்?

ஏசிசி லிமிடெட்

ஃபெடரல் மொகுல் கோட்ஸே (இந்தியா) லிமிடெட்

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ்

உள்ளிட்ட மூன்று பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது.

ஏசிசி லிமிடெட்

ஏசிசி லிமிடெட்

ஏசிசி லிமிடெட் இந்திய சிமெண்ட் துறையை சேர்ந்த நிறுவனமாகும். தொடர்ந்து இதன் உற்பத்தி திறனை அதிகரித்து வரும் சூழலில், மேற்கொண்டு உற்பத்தி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் புதிய தலைவர்கள் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த் வருகின்றது. இதற்கிடையில் இந்த பங்கினை வாங்கி வைக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. 2391 - 2440 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இது அடுத்த 2 -3 வாரங்களில் 2813 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஸ்டாப் லாஸ் 2163 - 2207 ரூபாயாகவும் கணித்துள்ளது.

ஃபெடரல் மொகுல் கோட்ஸே (இந்தியா) லிமிடெட்

ஃபெடரல் மொகுல் கோட்ஸே (இந்தியா) லிமிடெட்

இந்த நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பிஸ்டன் மற்றும் பிஸ்டன் வளையன்களுடன் ஓழுங்கமைக்கப்பட்ட 2வது பெரிய நிறுவனமாகும். இது இந்திய சந்தையில் 30% பங்கினைக் கொண்டுள்ளது.

இது நிதி நிலையில் நல்ல நிலையில் காணப்படும் நிலையில், இதன் வளர்ச்சி விகிதமும் வலுவாக காணப்படுகின்றது. இது வரவிருக்கும் காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அடுத்த 2 - 3 வாரங்களில் இப்பங்கின் விலையானது 354 மற்றும் 380 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் எனவும், இதனை 316 - 322 லெவலில் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 271 - 277 ரூபாயாகும்.

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ்

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ்

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் பங்கினையும் வாங்கலாம் எனவும், இது சர்வதேச அளவில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், இதன் வளர்ச்சி விகிதம் வலுவான வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பங்கினை 4318 - 4365 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதன் இலக்கு விலை 4756, 5080 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் விலை 3893 ரூபாயாகும்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+