இந்தியாவில் கனரக வாகன உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் எஸ்எம்எல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 10% வரை குறைந்து லோயர் சர்க்யூட்டில் வர்த்தகமானது. மகேந்திரா & மகேந்திரா லிமிடெட் நிறுவனம் இந்த நிறுவனத்தை கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு திங்கட்கிழமை அன்று சரிவை கண்டது.
மகேந்திரா & மகேந்திரா லிமிடெட் நிறுவனம் எஸ்எம்எல் நிறுவனத்தின் 58.96 சதவீத பங்குகளை வாங்க இருக்கிறது. இதற்காக ஒரு பங்கிற்கு 650 ரூபாயை மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் வழங்க இருக்கிறது. இதன்படி 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இந்த பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக மகேந்திரா நிறுவனம் எஸ்எம்எல் நிறுவனத்தின் பிரமோடரான சிமிட்டோமோ கார்ப்பரேஷன் வைத்திருக்கும் 43.96 சதவீத பங்குகளையும் முழுவதுமாக வாங்க இருக்கிறது. அதேபோல ஐசு மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் வைத்திருக்கும் 15 சதவீத பங்குகளையும் மொத்தமாக வாங்க இருக்கிறது.

இதன் மூலம் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுவதுமே மகேந்திரா& மகேந்திரா நிறுவனத்திடமே வர இருக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்த உடன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ உரிமையாளராக இது மாறி விடும். மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் தங்களுடைய லாரி மற்றும் பேருந்து சம்பந்தப்பட்ட தொழிலை விரிவாக்கம் செய்யும் பொருட்டு எஸ்எம்எல் நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறது. இது தவிர எஸ்எமல் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் பங்குதாரர்களிடமிருந்து 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கும் தயாராக இருப்பதாக மகேந்திரா &மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து திங்கட்கிழமை அன்று எஸ்எம்எல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% வரை சரிவடைந்து 1596 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. அதே வேளையில் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.3% உயர்ந்து ஒரு பங்கின் விலை 2900 என வர்த்தகமானது.
எஸ்எம்எல் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதன் மூலம் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய லாரி மற்றும் பேருந்துகள் உற்பத்தி, விற்பனை சந்தையில் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் பிடி அதிகமாகும். தற்போது இந்தியாவில் இந்த பிரிவு ஆண்டுதோறும் ஆறு சதவீதம் வளர்ச்சியை கண்டு வருகிறது. 2031-ஆம் ஆண்டுக்குள் இது 12 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் தான் அசோக் லேலேண்ட் நிறுவனம் எஸ்எம்எல் நிறுவனத்தை வாங்க இருப்பதாக ஒரு தகவல் பரவியது .இந்த நிலையில் மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் அந்த நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications