இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் சரிந்துள்ளன. பங்குகள் சுமார் 6% அதிகமான சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் நிறுவனம் அதன் இண்ட்ராடே குறைந்தபட்சமான ரூ.4791 என்ற அளவை எட்டியுள்ளது. அக்டோபர் 2024 வரையில், ஹீரோ மோட்டோகார்ப் அதன் விற்பனையில் சுமார் 18% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி சுமார் 6,79,091 யூனிட்டுகளை விற்பனைகள் இதில் அடங்கும்.
பங்குச் சந்தையில் இன்று முக்கிய குறியீடுகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆட்டோ துறையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. பிஎஸ்இ ஆட்டோ குறியீடுகள் சுமார் 1.1% வரை சரிந்துள்ளன. குறிப்பாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி ஆட்டோ நிறுவன பங்குகளில், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டர்ஸ், டாடா மோட்டர்ஸ், அசோக் லேலண்ட் மற்றும் மாருதி சுசுகி, ஓலா எலக்ட்ரிக் பங்குகள் அதிக நஷ்டத்தை பதிவு செய்துள்ளன. அதேபோல், சமீபத்தில் பட்டியலிடப்பட்ட ஹூண்டாய் மோட்டர்ஸ் பங்குகளும், மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் அதிக லாபத்தில் உள்ள பங்குகள் உள்ளன.
'
இதற்கிடையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டின் இதே மாதத்தில் சுமார் 5,74.930 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது.
நிறுவனத்தின் தற்போதைய விற்பனை வளர்ச்சியானது விழாக்காலங்களில் கிரமப்புற நகர்புறங்களில் 100சிசி மற்றும் 125சிசி பைக்குகளில் தேவைகள் காரணமாக அமைந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்-இன் எலக்ட்ரிக் வாகன பிராண்டான விடா, அதன் தொடர் வளர்ச்சியை பதிவு செய்துளது. இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவான மாத விற்பனையை பதிவு செய்துள்ளது. இது அக்டோபர் 2024ன் படி சுமார் 8750 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
அதேபோல், மோட்டர்சைக்கிள்களின் வளர்ச்சியை பொறுத்தவரை 6,57,403 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டில் விற்பனையான 5,59,766 யூனிட்டுகளை விட அதிகமாகும், அதேபோல், ஸ்கூட்டர்கள் விற்பனை இந்த ஆண்டில் சரிந்துள்ளது. அதன்படி, சுமார் 43,304 யூனிட்டுகளை விறபனை செய்திருந்தது. இது கடந்த 2023ஆம் நிதியாண்டில் 45,589 யூனிட்டுகளாக இருந்தது.
உள்நாட்டு வாகன விற்பனைகளில் கடந்த 2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்ததை விட ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 2024 நிலவரப்படி சுமார் 6,57,403 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையான 5,59,766 யூனிட்டுகளை விட சரிவாகும். அதேபோல், ஏற்றுமதியை பொறுத்தவரை 15,164-லிருந்து சுமார் 21,688 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
ஆண்டு அடிப்படையில், இந்த நிதியாண்டில் விற்பனை ஆனது 37,33,931 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட 33,44,030 யூனிட்டுகளை விட அதிகமாகும். அதேபோல், நிறுவனம் விழாக்கால விற்பனையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக தனந்திரேஸில் இது இரட்டை இலக்க விற்பனையை பதிவு செய்துள்ளது.
அதேபோல், ஹீரோ மோட்டோகார்ப் அதன் டீலர்ஷிப் நெட்வேர்க்குகளை 50 பிரேமியா அவுட்லெட்டுகளை அதிக நகரங்களில் விரிவாக்கம் செய்துள்ளது. இது வரும் மார்ச் மாதத்திற்குள் 1000 அவுட்லெட்டுகளை விரிவாக்கம் செய்ய உள்ளது. அதேபோல், இந்த மாத கடைசியில், நிறுவனம், 9 பிரேமியா அவுட்லெட்டுகளை வெவ்வேறு நகரங்களில் திறக்க உள்ளது.
இதற்கிடையில், தற்போதைய நிலவரப்படி, மதியம் 1 மணி வரையில்,ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் சுமார் 5.23% சரிந்து ரூ.4,758 ஆக வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications