மும்பை: இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப்பின் ஒரு பங்கின் மதிப்பானது ஓராண்டு காலத்தில் 100% வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் பங்குகள் மேலும் 30 சதவீதம் வரை உயரக்கூடும் என உள்நாட்டு தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.
அண்மையில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் வீடா வி1 ப்ரோ என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த மின்சார ஸ்கூட்டரின் பிரத்தியேக சலுகையாக வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்கிய பிறகு ஐந்தாண்டு காலத்திற்கு இலவசமாக சர்வீஸ் செய்து தரப்படும் என ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆப்டர் சேல்ஸ் பேக்கேஜ் என்பது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது, வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் படிப்படியாக அதிகரித்தன. 27ஆம் தேதி பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவீதம் உயர்வு கண்டு ரூ. 4,631.90 என்ற அளவில் வர்த்தகமானது. இதனை அடுத்து ஷேர்கான் பங்கு நிறுவனம் ஹீரோ மோட்டார் பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது.
அண்மையில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய வாகனங்களின் விற்பனை மற்றும் மின்சார வாகன துறையில் இதன் விரிவாக்கம் ஆகியவை காரணமாக வளர்ச்சி என்பது பாசிட்டிவாக இருக்கிறது என ஷேர் கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்துறை மூலம் கிடைக்கும் வருவாய் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக பிரிமியம் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஹீரோ மோட்டார் சந்தை பங்கு தொடர்ந்து அதிகரிக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை எட்டும் என ஷேர்கான் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் அதன் பிராண்ட், மாடல்கள் மற்றும் பிரீமியம் கடைகளில் அதிக கவனத்தை செலுத்துவதையும் ஷேர்கான் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை ரூ. 4631.90 என உயர்வு கண்டது. ஹீரோ மோட்டார் காப் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 93,000 கோடி என்ற நிலையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 100% மற்றும் கடந்த ஆறு மாத காலத்தில் 55% உயர்ந்துள்ளது.
ஹீரோ 2.0 கடைகள் மூலம் ஹீரோ மோட்டார் நிறுவனம் தங்களது டிஸ்ட்ரிபியூஷன் அமைப்பை மறுசீரமைத்துள்ளதால் நம்பிக்கையுடன் இந்த பங்குகளை வாங்கலாம் என்றும், ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது கூடிய விரைவில் ரூ. 6,057 என்ற அளவை எட்டும் என்றும் ஷேர்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications