பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் குறிப்பிட்ட நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொட்டி தந்துள்ளன. அதில் ஒரு நிறுவனம் தான் Himachal Futuristic Communications Limited - HFCL Ltd.
HFCL நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 6 மாதங்களில் 260 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்த இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 6 மாதங்களில் முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இப்பங்கு இன்று மட்டும் 3% உயர்ந்து 250 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளில் மட்டும் இப்பங்கு சுமார் 16% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 23 அன்று ஒரு பங்கின் மதிப்பு 59.83 ரூபாய்க்கு தான் இருந்தது. ஆனால் தற்போது 250 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. அந்த பங்கு, ஆகஸ்ட் 31 அன்று 257 ரூபாய் என்ற புதிய 52 வார உச்சத்தை தொட்டது.இந்த நிறுவனம் பாதுகாப்பு , ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் இயங்கி வருகிறது. அதிவேக, பாதுகாப்பான குரல் மற்றும் தரவு பரிமாற்றத்திற்கான டிஜிட்டல் நெட்வொர்க் தீர்வுகளை இந்நிறுவனம் வடிவமைத்து வழங்கி வருகிறது.
செப்டம்பர் 1 அன்று, ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை வழங்குவதற்காக நீண்ட கால ஒப்பந்தத்தில் 2,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்நிறுவனம் கையெழுத்திட்டது. மேலும் உத்தரப்பிரதேசத்தின் டெலிகாம் வட்டாரத்திற்கான பாரத்நெட் திட்டத்தின் கீழ் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திடமிருந்து 2,666.09 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது.
2026ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 5,014.52 ரூபாயாக கோடியாக உயர்ந்தது,முந்தைய நிதியாண்டில் இது 4,122.28 கோடியாகும், அந்த வகையில் வருவாய் 21.6% வளர்ச்சி அடைந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் 90.1% அதிகரித்து 329.44 கோடி ரூபாயை எட்டியுள்ளது, முந்தைய ஆண்டில் 173.26 கோடி ரூபாயாகவே இருந்தது.
குளோப் கேப்பிடல் மார்க்கெட் நிறுவனத்தின் விபின் குமார் கடந்த 8 மாதங்களில் இப்பங்கு 60 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை ஏற்றத்தை சந்தித்துள்ளது. எனவே இந்த சமயத்தில் லாபத்தை பதிவு செய்ய முதலீட்டாளர்கள் முற்படலாம் எனவே விலை குறையும் போது வாங்கும் உத்தியை பின்பற்றலாம் என்கிறார். குறிப்பாக விலை 230 ரூபாயில் இருந்து 210 ரூபாய் வரை சென்றா அது புதிய முதலீட்டிற்கான நல்ல வாய்ப்பாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
ஆனந்த் ரதி ஷேர் அண்ட் ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் நிறுவனத்தின் ஜிகர் படேல் ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்கள் லாபத்தை பதிவு செய்து கொள்வது நல்லது என்றும், புதிய முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு வாங்குவதை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


