10 மாதங்களில் 265% லாபம் தந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது வாங்கலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் தொலைதொடர்பு சேவை சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை வழங்கும் நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தருபவையாக மாறியுள்ளன. அப்படி 10 மாதங்களில் 265 % வளர்ச்சியை தந்த ஒரு பங்கு குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தொலைதொடர்பு துறையில் கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமான எச்எஃப்சிஎல் லிமிடெட் (HFCL Ltd) பங்குகள் நடப்பு ஆண்டில் அபார வளர்ச்சியை பெற்றுள்ளன. இந்த ஜனவரி முதல் இன்று வரை இந்த பங்கு 265.95 % அதிகமான லாபத்தை வழங்கி முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஜாக்பாட்டை தந்துள்ளது.

10 மாதங்களில் 265% லாபம் தந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது வாங்கலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஜனவரி 1ஆம் தேதி அன்று வெறும் 68 ரூபாயாக இருந்த ஒரு பங்கு மதிப்பு இன்று 256 ரூபாயாக உள்ளது. இருந்தாலும் பங்குகளின் இந்த திடீர் மற்றும் தொடர்ச்சியான விலை ஏற்றத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பங்குச் சந்தையும் இந்த பங்குகளை நீண்ட கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் (Long-term ASM - Additional Surveillance Measure) கீழ் வைத்துள்ளது. அசாதாரண விலை நகர்வுகள் மற்றும் அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Also Read

இதற்கிடையே பிரபல நிறுவனமான நுவாமா , எச்எஃப்சிஎல் நிறுவன பங்குகளுக்கு வாங்குங்கள் என்ற பரிந்துரையை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை டெலிகாம் மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்பு பிரிவுகளை நோக்கி வெற்றிகரமாக மாற்றியுள்ளது. நிறுவனத்தின் வசம் உள்ள ஆர்டர்களின் மதிப்பு மற்றும் மூலதன செலவு திட்டங்கள் மிக வலுவாக உள்ளன என கூறியுள்ளது.

Recommended For You

குறிப்பாக டேட்டா சென்டர்கள் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த துறைகளில் நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன என்றும் இதனால் பங்கு மதிப்பு உயரும் என்றும் கணித்துள்ளது. எச்எஃப்சிஎல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களிடமிருந்து குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடமிருந்து Turnkey திட்டங்களை பெற்று வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்ந்த திட்டங்களிலும் இந்நிறுவனம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவிக்கிறது. கட்ந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 5000 கோடி ரூபாய் வருவாயையும், 329 கோடி ரூபாய் லாபத்தையும் பதிவு செய்திருந்தது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+