இந்தியாவில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட பொது துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 1.38% உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதிக முதலீட்டாளர்களின் கவனம் பெற்ற பாதுகாப்பு துறை நிறுவன பங்காக இது மாறியுள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம், சிறிய செயற்கைக்கோள் ஏவுகணைக்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தில் பல விண்வெளி அமைப்புகளுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை அடுத்து , அதன் பங்கு விலை புதன்கிழமை உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தையில் 1.38% அதிகரித்து ரூ. 4,515.00 என வர்த்தகமானது.

இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe), நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக HAL அறிவித்துள்ளது.
SSLV (Small Satellite Launch Vehicle) என்பது மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு ஏவுகணை ஏவும் அமைப்பாகும். இது 500 கிலோவுக்கு குறைவான எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் (LEO) செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் இரண்டு ஆண்டுகளில் HAL இதற்கான தொழில்நுட்பத்தை கற்று கொள்ளும், அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு உற்பத்தியை மேற்கொள்ளும்.
"இந்த ஒப்பந்தம் HAL-க்கு SSLV தொழில்நுட்பத்திற்கான பிரத்தியேக உரிமத்தை வழங்குகிறது. இதில் விரிவான வடிவமைப்பு, உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, ஒருங்கிணைப்பு, ஏவுதல் செயல்பாடுகள் மற்றும் ஏவுதலுக்குப் பிந்தைய ஆய்வுகள், அத்துடன் பயிற்சி மற்றும் ஆதரவு ஆகியவை அடங்கும்" என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் செப்டம்பர் 10 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம், HAL இப்போது ஏவுகணையை உருவாக்கவும், சொந்தமாக்கவும், இயக்கவும் அதிகாரம் பெறும். இது ஒரு பிரத்யேக விண்வெளிப் பிரிவை நிறுவுவதற்கான அதன் நீண்டகால திட்டத்துக்கு உதவியாக இருக்கும்.
ஆஷிகா இன்ஸ்டிட்யூஷன் ரிசர்ச் நிறுவனத்தின்ஆய்வாளர் கிருஷ்ணா தோஷி, இந்த முயற்சி பாதுகாப்பு விமானத்துறைக்கு அப்பால் HAL-ன் வளர்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்துகிறது என்றும், உலகளாவிய சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகள் சந்தையில் வருவாய் ஈட்டும் திறனை அதிகரிக்கும் என்றும் கூறினார்.
HAL பங்கு விலை ஒரு மாதத்தில் மாறாமல் உள்ளது, மூன்று மாதங்களில் 12% சரிந்துள்ளது. ஆறு மாதங்களில் இந்த பொதுத்துறை பாதுகாப்புப் பங்கு 32% உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 8% லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் HAL பங்கு விலை 4% சரிந்திருந்தாலும், ஐந்து ஆண்டுகளில் 942% மல்டிபேகர் வருமானத்தை வழங்கியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications