லார்ஜ் கேப் உலோகத் துறை பங்குகளான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 8 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. இந்நிறுவனத்தின் 2.5 சதவீத பங்குகளை அதாவது 5.28 கோடி பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் மூலம் விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் இன்று ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் கடும் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஒரு பங்கின் விலை ரூ. 505 ஆகும். இது முந்தைய வர்த்தகத்தில் இறுதி விலையை விட 9.8 சதவீதம் குறைவு ஆகும்.
சமீபத்தில் நிறுவனம் செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டிற்கான நிதி முடிவுகளை அறிவித்தது. அதன்படி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 35 சதவீதம் அதிகரித்து ரூ. 2327 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 1729 கோடி ஆகும். மேலும், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 21 சதவீதம் அதிகரித்து ரூ. 6619 கோடியிலிருந்து ரூ. 8004 கோடியாக உள்ளது.

இந்நிறுவனத்தின் பங்குக் கண்ணோட்டத்தைப் பார்த்தால், இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் பங்கு விலை சுமார் 8.3 சதவீதம் குறைந்து ரூ. 514.70-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 807.70 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூ. 284.60 ஆகவும் உள்ளது.
கடந்த வாரத்தில் பங்கு விலை சுமார் 7 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்தப் பங்கு சுமார் 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் சுமார் 12 சதவிகிதம், கடந்த ஆண்டில் 75 சதவிகிதம், 146 சதவிகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் லாபத்தில் ஒரு சதவீதம் அதன் பங்குதாரர்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,19,000 கோடியாக உள்ளது.
ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் என்பது முன்னணி வணிகக் குழுவான வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி உற்பத்தியாளராக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் நாட்டின் தலைநகரான புது டெல்லியில் உள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications