இன்றைய பங்குச் சந்தையில் வெள்ளி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவில் 513.60 ரூபாயில் இருந்து சிறிது உயர்வுடன் 515.10 ரூபாயில் இன்று திறக்கப்பட்டது. தற்போது இது 4% அதிகரித்து ரூ. 535 ஆக உயர்ந்துள்ளது.
பண்டிகை காலம் நெருங்கி வரும் நேரத்தில், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.78 ஆயிரத்தை எட்டியுள்ளது. வெள்ளியின் மிகப்பெரிய அதிகரிப்பின் தாக்கம் வேதாந்தா குழுமத்தின் மாபெரும் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகளிலும் காணப்படுகிறது . இந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் புதன்கிழமை 4 சதவீதம் லாபத்தைப் பதிவு செய்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் அதன் முந்தைய முடிவான ரூ.513.60 இலிருந்து சிறிது உயர்வுடன் ரூ.515.10 என்ற அளவில் தொடங்கப்பட்டது. ஆனால், இது 4 சதவீதம் அதிகரித்து ரூ.535 ஆக உயர்ந்தது. ஹிந்துஸ்தான் ஜிங்க் நாட்டிலேயே வெள்ளி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வெள்ளியின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அதன் பங்குகளை பாதிக்கின்றன.
சமீபத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் தனது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான முடிவுகளை வழங்கியது. இதில் நிறுவனத்தின் லாபம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,729 கோடியாக இருந்த நிலையில், 35% அதிகரித்து ரூ.2,327 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.8,004 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.6,619 கோடியை விட 21% அதிகமாகும். இது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.2,345 கோடியிலிருந்து வரிக்குப் பிந்தைய லாபம் 0.8% குறைந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளி விலை: தேசியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அக்டோபர் 22ஆம் தேதி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1 லட்சத்தை எட்டியது. இதற்கிடையில், செவ்வாயன்று, MCX இல் டிசம்பர் வெள்ளி கான்ட்ராக்ட்ஸ் ரூ. 2,019 அதாவது 2% க்கும் அதிகமாக உயர்ந்து ரூ. 99,475 ஆக உள்ளது. அதே நேரத்தில் மார்ச் 2025 ஃபியூச்சர் வெள்ளி ரூ. 1,847 அதாவது 1.85% உயர்ந்து ரூ. 1,01,688 ஆக இருந்தது.
இதற்கிடையில், இன்றைய வர்த்தகம் முடியும் நேரத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் 2.05% உயர்வுடன் ரூ. 524.15 ஆக வர்த்தகமானது
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications