அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி டோட்டல் கேஸ் பங்கின் விலையானது, அதன் 52 வார உச்சத்தில் இருந்து 77% சரிவினைக் கண்டு, 3998.35 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இந்த பங்கானது ஹிண்டர்ன்பர்க் அறிக்கையனது வந்ததில் இருந்தே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் கடந்த அமர்வில் 5% சரிவினைக் கண்டு, 925.10 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதே இன்று 5% சரிவினைக் கண்டு, 876.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானி டோட்டல் கேஸ் பங்கு
அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 1,01,743.43 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இப்பங்கின் விலையானது கடந்த ஜனவரி 24, 2023 நிலவரப்படி 3885.45 ரூபாயாக இருந்தது.
அதானி குழுமத்தினை சேர்ந்த 10 நிறுவனங்கள் ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு கடும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றன. இது அதானி குழுமம் பங்கு விலையை உயர்த்த பல மோசடியான வேலைகளில் ஈடுபட்டதாகவும், மோசடியான பண பரிவர்த்தனை, ஷெல் நிறுவனங்கள் என மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அறிவித்தது.
அடுத்த ஆய்வு
அதானி குழுமத்தின் இரண்டு குறியீட்டினை MSCI குறைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அது தள்ளிவைக்கபப்ட்டது. இதில் அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். இந்த MSCI குறியீட்டின் அடுத்த ஆய்வானது மே மாதம் நடக்கவுக்ளது.
அதானி டோட்டல் கேஸ் லாபம்
முன்னதாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏசிசி ஆகியவற்றின் ப்ரீ ப்ளோட்டை குறைத்தது.
அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் டிசம்பர் காலாண்டில், 150 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்து 17% அதிகரித்துள்ளது. இது 128 கோடி ரூபாயாக இருந்தது.
செயல்பாட்டின் மூலம் வருவாய்
அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் வருவாய் விகிதம் மூன்றாவது காலாண்டில் 1185 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 27% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டில் 932 கோடி ரூபாயாக இருந்தது.
இனியும் சவால்களை எதிர்கொள்ளலாம்
ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு இந்த நிறுவனம் இன்னும் சவால்களை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வளர்ச்சி விகிதம் என்பது அதன் நிதி திரட்டலை பொறுத்து இருக்கலாம். இது மேலும் 18 - 24 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மீண்டு வரும்
அதானி குழுமத்தின் வணிகத்தினை யாரும் கேள்வி கேட்கவில்லை என நினைக்கவில்லை. ஆனால் பிரச்சனை சரியாகி விட்டால், அவை மீண்டும் பாதைக்கு திரும்பும் எனலாம். ஆனால் அதற்கு சிறிது நேரம் ஆகும். பெரும்பாலான பங்குகள் இன்னும் விலை உயர்ந்தவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications