அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா ரத்தகளரி.. 10 சதவீத சரிவால் கண்ணீர் விடும் முதலீட்டாளர்கள்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 60 நாடுகள் மீது விதித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி உலகளவில் வர்த்தகப் போருக்கு வித்திட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரியை பெய்ஜிங் விதித்ததைத் தொடர்ந்து, ஹாங்காங் மற்றும் சீன பங்குச் சந்தைகள் திங்களன்று திறந்தவுடன் கடும் சரிவை சந்தித்தன.

இதே ரெசிப்ரோக்கல் வரி மூலம் அமெரிக்க பங்குச்சந்தையில் சந்தை மதிப்பு 2 நாளில் 5 டிரில்லியன் டாலர் வரையில் சரிந்த நிலையில்ல, திங்கட்கிழமை காலையில் 3 நாள் வர்த்தக விடுமுறைக்கு பின்பு துவங்கிய சீன பங்குச்சந்தை மோசமான சரிவை பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 4, வெள்ளிக்கிழமை, சிங் மிங் பண்டிகையை முன்னிட்டு ஹாங்காங் மற்றும் சீன பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா ரத்தகளரி.. 10 சதவீத சரிவால் கண்ணீர் விடும் முதலீட்டாளர்கள்..!

ஹாங்காங்: விடுமுறை முடிந்து திங்களன்று சந்தை திறக்கப்பட்டதும், ஹாங்காங்கில் உள்ள முக்கிய சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ள ஹாங் செங் இன்டெக்ஸ், காலை 9:52 மணி நிலவரப்படி 10.21% சரிந்தது.

இந்தச் சரிவு டெக் துறையை தாண்டி பிற முக்கிய துறைகளையும் பாதித்தது. அடிப்படைப் பொருட்கள், சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் அதிக சரிவை சந்தித்தன.

ஹாங்காங்கின் ஹாங் செங் டெக்னாலஜிஸ் இன்டெக்ஸ் 12.11% சரிந்தது. இந்த குறியீட்டில் மோசமான சரிவை சந்தித்த நிறுவனங்களாக சன்னி ஆப்டிகல் டெக்னாலஜி குரூப் 17.16% சரிவையும், பிஒய்டி எலக்ட்ரானிக் இன்டர்நேஷனல் 16.85% சரிவையும், லெனோவா குரூப் 16.58% சரிவையும் சந்தித்தன. தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு ஆகியவை 10.93% மற்றும் 10.08% சரிவுடன் வர்த்தகமாயின.

சீன பங்குச்சந்தை: சீனாவின் பங்குச் சந்தைகளும் பெரும் சரிவை சந்தித்தன. சிஎஸ்ஐ 300 இன்டெக்ஸ் 5.42% சரிந்தது, அதே நேரத்தில் ஷாங்காய் காம்போசிட் இன்டெக்ஸ் 5.48% சரிந்தது.

இதேவேளையில் ஃபின்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் சீனாவின் கடன் மதிப்பீட்டை A+ இலிருந்து A ஆக குறைத்தது, மேலும் ஸ்டேபிள் அவுட்லுக்-ஐ வழங்கியது. அமெரிக்காவின் எதிர்பாராத வரி அதிகரிப்புகள் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறுகளைக் காரணம் காட்டி, 2025 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 5.0% இலிருந்து 4.4% ஆக திருத்தி அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசு கடந்த 100 வருடத்தில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வரிகளை கடந்த வாரம் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, சீனாவின் பதிலடி கொடுத்தும் பங்குச்சந்தை அதிகளவில் பாதித்துள்ளது. இதன் மூலம் சீனாவின் வர்த்தகம் எந்த அளவுக்கு அமெரிக்க சந்தையை சார்ந்துள்ளது எ என்பதை காட்டுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+