அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம் கடந்த வாரம் செபி கூடுதல் அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுத்ததில் இருந்து மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. செபி 6 மாதம் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் 3 மாதம் மட்டுமே அவகாசம் அளித்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி அதானி குழுமம் குறித்து குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என செபிக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு குழு அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து செபி இதுவரையில் செய்த ஆய்வின் விபரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல முக்கியமான விபரங்களை இந்த சிறப்பு குழு வெளியிட்டதன் மூலம் இன்று பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது.

MSCI இந்த மாத இறுதிக்குள் இந்தியா குறியீட்டில் இருந்து அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகளை வெளியேற்றப்போகும் காரணத்தால் இந்த வாரம் மட்டும் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள அதானி குழும நிறுவன பங்குகளின் நிலவரம்.
அதானி எண்டர்பிரைசஸ் - 3.65 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 3.65 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.93 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 4.62 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 4.18 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 3.05 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 6.85 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 1 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.20 சதவீதம் உயர்வு
NDTV - 3.53 சதவீதம் உயர்வு
இதேபோல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட பின்பு அதானி குழு பங்குகள் அதிகளவிலான தடுமாற்றத்தை பதிவு செய்த காரணத்தால் 2023 ஆம் ஆண்டில் இதன் பங்கு மதிப்பமும் சந்தை மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் அதானி குழும பங்குகள் 2023ல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதையும் பார்ப்போம்.
2023 ஆம் ஆண்டில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 49.05 சதவீதம் சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு 2.23 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதானி போர்ட்ஸ் பங்குள் 16.32 சதவீதம் சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு 1.49 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதானி பவர் பங்குகள் 20.78 சதவீதம் சரிந்துள்ளது.
இதன் சந்தை மதிப்பு பங்குகள் 91.16 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 69.17 சதவீதம் சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு பங்குகள் 87.70 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 52.49 சதவீதம் சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு பங்குகள் 1.42 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 80.64 சதவீதம் சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு பங்குகள் 75.56 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதானி வில்மார் பங்குகள் 33.12 சதவீதம் சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு பங்குகள் 52.52 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஏசிசி லிமிடெட் பங்குகள் 29.11 சதவீதம் சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு பங்குகள் 32.50 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 23.37 சதவீதம் சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு பங்குகள் 80.18 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் NDTV பங்குகள் 47.65 சதவீதம் சரிந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு பங்குகள் 1,150 கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications