3 விவசாய சட்டங்கள் ரத்து.. லோக்சபாவில் ஒப்புதல்.. விவசாய துறை நிறுவனங்களின் நிலை என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய விவசாயிகளின் பல மாத போராட்டத்தின் பலனாக இன்று துவங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு கோரிக்கை மற்றும் முழக்கங்கள் மத்தியில் மோடி தலைமையிலான அரசு அறிவித்த 3 விவசாயச் சட்டங்களை முழுமையாகத் திரும்பப்பெறத் தாக்கல் செய்யப்பட்ட மசோதா லோக்சபாவில் விவாதமின்றி நிறைவேறப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பி-க்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பாக முழக்கங்கள் எழுப்பிய காரணத்தால் விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேறிய பின்னர் லோக்சபா நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாளை தொடங்கவுள்ள ஸ்டார் ஹெல்த் ஐபிஓ.. முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..!

மேலும் மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா ராஜ்யசபாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

3 விவசாயச் சட்டங்களை ரத்து

3 விவசாயச் சட்டங்களை ரத்து

மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா-வை மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் லோக்சபாவில் தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

ராகேஷ் திகாயத்

ராகேஷ் திகாயத்

விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேறினாலும் போராட்டம் தொடரும் எனப் பாரதிய கிசான் ஒன்றியத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விவசாயிகள் மத்திய அரசி சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், அதற்கான முடிவுகள் தெரிந்த பின்பு விவசாயிகள் அடுத்த கட்ட நடவடிக்கையை டிசம்பர் 4-ல் முடிவெடுக்கப்படும் எனவும் ராகேஷ் திகாயத்.

முதல்கட்ட ஒப்புதல்
 

முதல்கட்ட ஒப்புதல்

இந்நிலையில் 3 விவசாயச் சட்டங்கள் ரத்துச் செய்யப்படும் மசோதா முதல்கட்ட ஒப்புதல் பெற்றுள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் விவசாயத் துறை பங்குகள் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதனால் பல முதலீட்டாளர்களின் முதலீடு சரிவது மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பீடும் குறைந்து வருகிறது.

விவசாயப் பிரிவு நிறுவனங்கள்

விவசாயப் பிரிவு நிறுவனங்கள்

பாம்பே பர்மா 1.81 சதவீதம் சரிவு, காவேரி சீட்ஸ் 2.72 சதவீதம் சரிவு, நாத் பயோ ஜீன்ஸ் 0.99 சதவீதம் சரிவு, குட்ரிக்கி குரூப் 2.43 சதவீதம் சரிவு, ஜேக் அக்ரி ஜெனடிக் 0.37 சதவீதம் சரிவு, ஹேரிசன்ஸ் மலாய் 2.33 சதவீதம் சரிவு, தனுஸ்ரீ டீ 2.20 சதவீதம் சரிவு, நீலமலை அக்ரோ 2.18 சதவீதம் சரிவு, இண்டோ யூஎஸ் பயோ டெக் 1.85 சதவீதம் சரிவு.

இப்பிரிவில் ஸ்ரீகனேஷ் பயோ நிறுவன பங்குகள் 0.81 சதவீதம் உயர்ந்து 148.60 ரூபாய்க்கும், மங்களம் சீட்ஸ் 0.81 சதவீதம் உயர்ந்து 86.00 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது.

உரங்கள் பிரிவு நிறுவனங்கள்

உரங்கள் பிரிவு நிறுவனங்கள்

இப்பிரிவில் சாம்பல் பெர்ட் 1.75 சதவீதம் சரிவு, பெர்ட் அண்ட் கெம் 2.64 சதவீதம் சரிவு, GSFC 0.04 சதவீதம் சரிவு, தீபக் பெர்ட் 2.06 சதவீதம் சரிவு, ராஷ்ட்ரிய கெம் 2.68 சதவீதம் சரிவு, NFL, SPIC, மங்களூர் கெம், ரமா பாஸ்பேட்ஸ் ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எட்டியுள்ளது.

டாடா கெமிக்கல்

டாடா கெமிக்கல்

ஆனால் டாடா கெமிக்கல் 3.62 சதவீதமும், கோரமண்டல் இண்டர்நேஷனல் 0.16 சதவீதமும், GNFC 1.42 சதவீதமும், நாகர்ஜுனா பெர்ட் 4.32 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இதேபோல் சர்க்கரை பிரிவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் இன்று சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Agricultural and Fertilizer companies reacts in BSE after 3 Farm Laws Repeal Bill passed by Lok Sabha

How Agricultural and Fertilizer companies reacts in BSE after 3 Farm Laws Repeal Bill passed by Lok Sabha
Story first published: Monday, November 29, 2021, 15:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X