அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் பல்வேறு யோசனைகளை வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தொடர்ந்து பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாட்டு பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அதிகப்படுத்தி இருக்கிறார். இதன் காரணமாக சர்வதேச அளவில் ஒரு பொருளாதார ஸ்திரமற்ற தன்மை நிலவி வருகிறது .

ஏப்ரல் மாதத்திலிருந்து டிரம்ப் நிர்வாகம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீதும் போட்டி வரியை விதிக்க இருப்பதால் இந்த பொருளாதார சூழல் இன்னும் சிக்கலானதாக மாறும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளை சேர்ந்த 95 சதவீத பொருளாதார நிபுணர்கள் டிரம்பின் நடவடிக்கையால் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என எண்ணுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியா பங்குச் சந்தையை பொறுத்தவரை மிகப்பெரிய சரிவிலிருந்து கடந்த சில நாட்களாக தான் மீண்டு வருகிறது. ஆனால் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பிறகு சூழல் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது என சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் மந்த நிலை ஏற்பட்டால் அது இந்திய பங்கு சந்தையிலும் பங்குகள் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என எஸ்கேஜி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் குஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருக்கிறது ,குறிப்பிட சில பொருளாதார நடவடிக்கைகள் சரிந்து இருக்கின்றன இத்தகைய சூழலில் அமெரிக்க பொருளாதாரம் பெரிய அளவில் மந்த நிலைக்கு செல்லும் என நாம் கூற முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய எந்த ஒரு பொருளாதார தாக்கமும் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை , ஆனால் இந்திய பங்குச் சந்தையை பொறுத்தவரையில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் சில்லறை முதலீட்டாளர்களும் படிப்படியாக வலுப்பெற்று வருகின்றனர் என்பதால் எந்த ஒரு சூழலிலும் அவர்கள் பங்குச்சந்தையை காப்பாற்றுவார்கள் என தெரிவிக்கிறார்.
வரலாற்று ரீதியாக சர்வதேச அளவிலான பொருளாதார மந்த நிலை இந்திய பங்குச் சந்தைகளை பாதித்திருக்கிறது. ஆனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்த முறை இந்திய பங்குச்சந்தையை காப்பாற்றுவார்கள் என கூறியிருக்கிறார். இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
கிரீன் போர்ட்போலியோ நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீராம் தாஸ் ஏற்கனவே இந்திய பங்குச் சந்தை திருத்தத்திற்கு ஆளாகி விட்டது என தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆறு மாத காலம் மீண்டும் இந்திய பங்குச் சந்தை சரிவில் செல்லும் என அத்தனை உறுதியாக கூற முடியாது என்றும் இந்திய சந்தை கடந்த சில மாதங்களாகவே பெருமளவிலான சரிவையும் திருத்தத்தையும் சந்தித்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய சந்தை மீண்டு வரும் என்றே நம்பிக்கை தெரிவிக்கிறார். சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பலரும் வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவை நோக்கி தான் வருவார்கள் என அவர் குறிப்பிடுகிறார். இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய எண்ணுபவர்கள் தங்களுடைய முதலீட்டு தொகையில் 80 சதவீதத்தை ஈக்விட்டி மற்றும் 20 சதவீத தொகையை கடன் பத்திரங்களில் என பிரித்து முதலீடு செய்யலாம் என யோசனை கூறுகிறார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications