மும்பை: 2024 ஆம் ஆண்டு இந்திய பங்குச் சந்தை போக்கினை நாம் இரண்டாக பிரித்து பார்க்கலாம். ஏனெனில் 2024 ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை கண்டன. தற்போது சரிவடைந்து திருத்தத்தில் இருக்கின்றன.
இந்திய பங்குச் சந்தைகளின் போக்கை நிர்ணயம் செய்தது மக்களவைத் தேர்தல் என கூறலாம். ஏனெனில் தேர்தல் காலம் தொடங்கி தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவு வெளியான வரை 6 மாத காலத்தில் பங்குச்சந்தை வளர்ச்சி பாதையில் தான் இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய நாள் இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவிலான பணத்தை திரும்ப எடுத்து வருகின்றனர். இந்திய பங்குச் சந்தை மதிப்பீடு அதிகமாக இருப்பது மற்றும் சீன பங்குச்சந்தை தற்போது முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்திருப்பது ஆகியவற்றை இதற்கு நாம் காரணமாக கூறலாம்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான தொகையை வெளியே எடுத்து விட்டாலும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் சில்லறை முதலீட்டாளர்களும் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை மீது நம்பிக்கை வைத்து முதலீடுகளை மேற்கொண்டு வருவதால் மிகப்பெரிய அளவிலான சரிவிக்கு இந்திய பங்குச் சந்தைகள் செல்லவில்லை.
ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இந்த ஆண்டில் மற்ற துறைகளை விட கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளன. மீடியா மற்றும் எஃப்எம்சிஜி பிரிவினை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இந்த ஆண்டில் சற்று சரிவை கண்டன. மற்றபடி ஐடி ,உள்கட்டமைப்பு, நிதித்துறை மற்றும் வங்கி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 2024 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டி தந்துள்ளன.
ஜனவரி 1ஆம் தேதி பங்கு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72,538 புள்ளிகளாக இருந்து தற்போது டிசம்பர் மாதத்தில் 78,912 புள்ளிகள் என்ற அளவை எட்டியுள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி 85,000 புள்ளிகளை கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்.
அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஜனவரி 1ஆம்தேதி 21,800 புள்ளிகளில் இருந்து தற்போது டிசம்பர் மாதத்தில் 23,862 புள்ளிகளாக இருக்கிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியை பொருத்தவரை செப்டம்பர் 27ஆம் தேதி 26, 399 புள்ளிகளை எட்டி வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
இந்திய பங்குச்சந்தைகள் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலம் வரை ஏற்றத்திலேயே இருந்தது தற்போது சற்றே சரிவை கண்டுள்ளது இருந்தாலும். இது தற்காலிகமானது தான் என்றும் இந்த திருத்தத்திற்கு பின்னர் பங்குச்சந்தை ஏற்றத்தில் தான் இருக்கும் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications