நமது தபால் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு என பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தபால் நிலைய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் எவ்வளவு தொகை வட்டியாக கிடைக்கும் என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே நமது வங்கிகளும் , தபால் நிலையங்களும் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்களுடன் சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. அப்படி நமது தபால் நிலையங்களில் கிடைக்க கூடிய ஒரு சூப்பரான திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.

இதில் ஒருமுறை முதலீடு செய்து விட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டித்தொகை உங்களது கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
மூத்த குடிமக்கள் திட்டத்தை பொறுத்தவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வட்டி வருவாய் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டம் இது. இந்த திட்டத்தில் தற்போதைக்கு ஆண்டுக்குஇ 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் 1,000 ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், அரசு பணிகளில் ஓய்வு பெற்ற்றவர்களில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புத்துறை ஊழியர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை மார்ச் 31 ,ஜூன் 30, செப்டம்பர் 30 ,டிசம்பர் 31 ஆகிய ஆகிய தேதிகளில் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலத்தை தாண்டி கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு கூட இந்த திட்டத்தை நாம் நீட்டித்துக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் 8.2% வட்டி கிடைக்கிறது, அந்த வகையில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு, ஒவ்வொரு காலாண்டுக்கும் 10,250 ரூபாய் வட்டியாக கிடைக்கும் ஓராண்டில் 41,000 ரூபாய் வட்டி கிடைக்கும். எனவே இவர்களுக்கு முதிர்வு தொகையாக 7,05,000 கிடைக்கும்.
10 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு காலண்டிற்கும் 20,500 ரூபாய் வட்டியாகவும் ,ஒரு ஆண்டுக்கு 82,000 ரூபாய் கிடைக்கும். முதிர்வு தொகையாக மொத்தமாக 14,10,000 ரூபாய் கிடைக்கிறது.
15 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் 30,750 ரூபாய் வட்டி கிடைக்கும். ஓராண்டில் 1,23,000 ரூபாய் வட்டியாக மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக முதிர்வு காலத்தில் இந்த திட்டத்தில் 21,15,000 ரூபாய் கிடைக்கும்.
20 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு காலண்டுக்கும் 41,000 ரூபாயும், ஒரு ஆண்டில் 1,64,000 ரூபாய் வட்டியாகவும் கிடைக்கும். முதிர்வு காலத்தில் மொத்தமாக 28,20,000 ரூபாய் கிடைக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications