ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம்!!

ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர் தான் முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானி. பின்னாளில் தன்னுடைய நிறுவனம் திவால் ஆனதை அடுத்து உச்சத்தில் இருந்த அவர் பெரும் சரிவை சந்தித்தார்.

தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருக்கிறது. இதன் தலைவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் சகோதரர் தான் அனில் அம்பானி. இவர் தன்னுடைய ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் மூலம் பெரிய வளர்ச்சியை பெற்று இந்தியாவின் அசைக்க முடியாத தொழிலதிபராகவும் நம்பர் ஒன் பணக்காரராகவும் இருந்தார். இவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம்!!

அனில் அம்பானி அவ்வளவு தான் மீண்டு வரமாட்டார் என சொல்லப்பட்ட நிலையில் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து அவரை காப்பாற்றி இருக்கிறது ரிலையன்ஸ் பவர் நிறுவனம். அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 23 ரூபாய் என வர்த்தகமானது. அதுவே 2025ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி 59 ரூபாய் என்ற வளர்ச்சியை எட்டியுள்ளது.

ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தன்னுடைய சரிவிலிருந்து படிப்படியாக மீண்டு வருவதே அதன் பங்கு மதிப்பு உயர்ந்த வருவதற்கு முக்கிய காரணம் .கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 22 சதவீதம் உயர்ந்திருப்பதாக ரிபப்ளிக் வேர்ல்ட் செய்தி குறிப்பிடுகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 50 சதவீதம் வரை இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2021 ஆம் ஆண்டு வெறும் 3 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது இந்த ஐந்து ஆண்டுகளில் 2475 சதவீதம் என இதன் பங்கு மதிப்பானது உயர்ந்திருக்கிறது. ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியதற்கு முக்கிய காரணம் அனில் அம்பானி மற்றும் அவருடைய வாரிசுகள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் தான். ஏனெனில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முதல் கட்டமாக தன்னுடைய கடன்களை குறைக்கும் பணிகளை தீவிரமாக எடுத்தது. அது மட்டும் இல்லாமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தன்னுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய தொடங்கியது.

ரிலையன்ஸ் பவருக்கு சொந்தமான சாசன் பவர் லிமிடெட் நிறுவனம் தன்னுடைய 1285 கோடி ரூபாய் கடனை கடந்த டிசம்பரில் தான் செலுத்தியது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தன்னுடைய 5338 கோடி கடனை திரும்ப செலுத்தி உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் கடன் மற்றும் ஈக்விட்டிக்கு இடையிலான விகிதம் என்பது 1.61 லிருந்து 0. 88ஆக குறைந்து இருக்கிறது. இது தவிர ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தன்னுடைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை எல்லாம் கையகப்படுத்தி இருக்கிறது.

அண்மையில் தான் 350 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை இந்த நிறுவனம் கைப்பற்றியது. அதேவேளையில் பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் வழியாக தங்களுடைய நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நிதி திரட்டுதலையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்த நிறுவனம் 1525 கோடி ரூபாயை நிதியாக திரட்டி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வளர்ச்சி பாதையில் தான் இருக்கும் என கூறும் ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் தலைமை மேலாளர் ஓஷோ கிருஷ்ணன் தொடர்ந்து நான்கு வாரங்களாக இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு வளர்ச்சியில் தான் இருக்கிறது இது அப்படியே நீடிக்கும் என கூறுகிறார்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+