மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன்பு பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக ஒரு ஃபண்டின் கடந்த கால செயல்பாடு எப்படி இருந்தது? அதேபோன்ற பிற திட்டங்களுடன் ஒப்பிடும்போது வருமானம் அதிகமாக கிடைத்ததா? என்பது குறித்தும் ஆராய வேண்டும். அந்த வகையில் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) ஃபண்டுகள், கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவிலான வருமானத்தை வழங்கியுள்ளன. இந்தப் பதிவில், தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பல மடங்கு வருமானத்தை வழங்கிய 2 ELSS ஸ்கீம்கள் பற்றி தான் பார்க்கவுள்ளோம்.
அந்த இரண்டு திட்டங்கள் என்னவென்றால் டிஎஸ்பி ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட் மற்றும் மோதிலால் ஓஸ்வால் ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட். இந்த 2 ஃபண்டுகளும் அதிக அளவிலான வருமானத்தை வழங்கியுள்ளன. டிஎஸ்பி ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட் 7.8% வருமானத்தையும், மோதிலால் ஓஸ்வால் ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட் 5.2 சதவீத வருமானத்தையும் வழங்கியுள்ளன.

டிஎஸ்பி ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டு: dspim.com என்ற இணையதளத்தின் கணக்கீட்டின்படி, ஒருவர் டிஎஸ்பி ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டில் ரூ.1 லட்சத்தை, 1 வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால் அந்த முதலீடு ஒரு வருடம் கழித்து ரூ.1.17 லட்சமாக மாறியிருக்கும். அதே போல 3 வருடத்திற்கு முன்பு ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.1.74 லட்சம் வரை வருமானம் பெற்றிருக்கலாம்.
இதனால் 20.42 சதவீதம் வரை வருமானம் கிடைத்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் முதலீடு ரூ.3.56 லட்சமாக உயர்ந்திருக்கும். இப்படி முதலீடு செய்திருந்தால் 28.94 சதவீத வருமானத்தை பெற்றிருக்கலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அந்த முதலீடு ரூ.4.79 லட்சமாக மாறியிருக்கும்.
அதுவே 2013-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி டிஎஸ்பி ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட் தொடங்கப்பட்ட போது யாராவது ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அந்த முதலீடு தற்போது 7.88 லட்சமாக மாறியிருக்கும். இதனால் 18.25 சதவீதம் வருமானம் பெற்றிருக்கலாம்.
இந்த ஃபண்டை ரோகித் சிங்கானியா நிர்வகித்து வருகிறார். இந்த ஃபண்டின் பெஞ்ச் மார்க் நிஃப்டி500 டிஆர்ஐ. இதன் முக்கிய பங்குகள் HDFC பேங்க், ICICI பேங்க், ஆக்சிஸ் பேங்க், கோடக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ் மற்றும் HCL டெக்னாலஜிஸ் ஆகும்.
மோதிலால் ஓஸ்வால் ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட்: இந்த ஃபண்டில் ஒருவர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், வெறும் 1 ஆண்டில் ரூ.1.11 லட்சமாக பெற்றிருக்கலாம். 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், ஒரு ரூ. 1.87 லட்சம் வருமானம் பெற்றிருக்கலாம்.
இதனால் 23.25% வரை வருமானம் கிடைத்திருக்கும். அதேபோல கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் முதலீடு 3.59 லட்சமாக மாறியிருக்கும். இதனால் 29.14 சதவீதம் வரை வருமானம் கிடைத்திருக்கும். 2015-ஆம் ஆண்டு மோதிலால் ஓஸ்வால் டேக்ஸ் சேவர் ஃபண்ட் தொடங்கப்பட்ட போது ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், தற்போது அந்த முதலீட்டுக்கு ரூ.5.21 லட்சம் வருமானம் கிடைத்திருக்கும்.
இதனால் மொத்த வருமானம் 17.58 சதவீதமாக இருந்திருக்கும். மோதிலால் ஓஸ்வால் ELSS டேக்ஸ் சேவர் ஃபண்டின் பெஞ்ச் மார்க் இன்டெக்ஸ் நிஃப்டி500 டிஆர்ஐ. இந்த ஃபண்டை ராகேஷ் ஷெட்டி, அஜய் கண்டெய்வால் மற்றும் அதுல் மெஹ்ரா ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications