4 ஆண்டுகளில் 2800% உயர்ந்த ஸ்மால் கேப் நிறுவன பங்கு.. உங்க போர்ட்ஃபோலியோவில் இருக்கா?

இந்திய பங்குச்சந்தையில் ஸ்மால் கேப் நிறுவனமாக பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கு 4 ஆண்டுகளில் 2800 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை தந்திருக்கிறது.

Network People Services Technologies எனப்படும் என்பிஎஸ்டி நிறுவனம் இந்தியாவில் நிதி சார்ந்த தொழில்நுட்ப சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனமாக இருக்கிறது. யுபிஐ பண பரிவர்த்தனைகளில் வியாபாரிகளுக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்தி தருவது, டிஜிட்டல் பேங்க் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவது என்பன உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த இயங்கும் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி தருகிறது.

4 ஆண்டுகளில் 2800% உயர்ந்த ஸ்மால் கேப் நிறுவன பங்கு.. உங்க போர்ட்ஃபோலியோவில் இருக்கா?

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய பங்குச் சந்தையில் எஸ்எம்ஈ (small and medium enterprises - SME) நிறுவனமாக ஐபிஓ வெளியீடு செய்தது. அப்போது இதன் ஒரு பங்கு மதிப்பு 80 ரூபாயாக மட்டுமே இருந்தது. மூலதன அடிப்படையில் படிப்படியாக வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த நிறுவனம் கடந்த 30ஆம் தேதி எஸ்எம்ஈ தளத்திலிருந்து மெயின் போர்டு தளத்தில் பட்டியலாகி மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டு தளங்களிலுமே வர்த்தகமாகி வருகிறது.

தற்போது என்பிஎஸ்டி நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 2,300 ரூபாயாகவும் தேசிய பங்குச் சந்தையில் 2,295 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2021 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டதிலிருந்து தற்போது வரை 2800 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஸ்மால் கேப் நிறுவனமாக இருந்து எஸ்எம்ஈ பிரிவில் பட்டியலிடப்பட்டு தற்போது மெயின் போர்டு சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருப்பதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பகத்தன்மை மேலும் அதிகரித்து இருப்பதாக இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபக் சந்த் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் என்பிஎஸ்டி நிறுவனத்தின் வருமானம் 78.5% அதிகரித்து இருக்கிறது இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் 133 சதவீதம் உயர்ந்து 38 கோடிகளாக அதிகரித்துள்ளது. இந்நிறுவன பங்குகளில் 67.55 சதவீத பங்குகள் பிரமோட்டர்களிடமே உள்ளன. சில்லறை முதலீட்டாளர்கள் இதில் 32.41 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+