மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் ஒரு சில நேரங்களில் முதலீட்டாளர்களை பெரிய உயரத்திற்கு அழைத்துச் சென்று விடும். அப்படித்தான் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு ஃபண்ட் சிறந்த பெர்ஃபார்மன்ஸை வழங்கியுள்ளது. ஈக்விட்டி ஃபண்டுகளின் வரிசையில் HSBC மிட்கேப் ஃபண்ட் 24.13 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கி முதலீட்டாளர்களை பண மழையில் குவித்துள்ளது.
வேல்யூ ரிசர்ச் என்ற நிறுவனத்திடமிருந்து HSBC மிட்கேப் ஃபண்ட் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. அதேபோல மார்னிங் ஸ்டார் நிறுவனத்திடமிருந்து 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. 2004-ஆம் ஆண்டு இந்த ஃபண்ட் தொடங்கப்பட்ட போது மாதம் ரூ.10,000 வீதம் SIP முறையில் முதலீடு செய்திருந்தால் 2026-ஆம் ஆண்டில் அதன் மதிப்பு ரூ.2 கோடியாக இருந்திருக்கும்.

பிற ஃபண்டுகளின் செயல்திறனைக் காட்டிலும் இந்த ஃபண்டு தனது பென்ச்மார்க் குறியீடு மற்றும் பிற மிட்கேப் பிரிவுகளிலும் நல்ல வருமானத்தை வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 24.14 சதவீதமும், 5 ஆண்டுகளில் 18.36 சதவீதமும், 2004-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இன்று வரை 18.36 சதவீதமும் வருமானம் வழங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்த ஃபண்டின் வருமானமும் சற்று மாறுபட்டது. இதில் 2018-ஆம் ஆண்டு இந்த ஃபண்டின் வருமானம் 12.03 சதவீதம் குறைந்தது. 2019-ஆம் ஆண்டு 0.15 சதவீதமும், 2025-ஆம் ஆண்டு 1.35 சதவீதமும் குறைந்தது.
ஆனால் 2017-ஆம் ஆண்டில் இதற்கு நேர் மாறாக 52.33 சதவீதமும், 2023-ஆம் ஆண்டில் 40.01 சதவீதமும், 2024-ஆம் ஆண்டில் 39.73 சதவீதமும் அதிகரித்தது. கடந்த 3 ஆண்டுகளில் மாதம் ரூ.10,000 வீதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தால் மொத்தமாக ரூ.3.6 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். தற்போது அதன் மதிப்பு ரூ.4.72 லட்சமாக மாறி இருக்கும். அதே போல கடந்த 10 ஆண்டில் மாதம் ரூ.10,000 எஸ்ஐபி முறையில் முதலீடு செய்திருந்தால் சுமார் 16.80 சதவீத வருடாந்திர வருமானத்தை பெற்றிருக்கலாம்.
ஃபண்டு மேனேஜர்கள் தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானம் தரக்கூடிய பாட்டம் ஆப் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்துள்ளனர். இதனால் தான் இந்த ஃபண்டின் வருவாய் தொடர்ந்து அதிகரித்தது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட துறைகளை தெரிந்து கொண்டு முதலீடு செய்ததுதான் இந்த ஃபண்டின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
நிஃப்டி 150 குறியீடு 9.6 சதவீதம் வருமானத்தை வழங்கியபோதும் இந்த ஒரு ஃபண்ட் 22.8% வருமானம் வழங்கி கூடுதல் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்தது. ஒரு ஃபண்டின் கடந்த கால பெர்ஃபார்மன்ஸை வைத்து இனிவரும் ஆண்டுகளிலும் அதேபோல தொடர்ந்து செயல்படும் என்று கூறி விட முடியாது. இந்த பதிவு வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை.
எனவே முதலீட்டாளர்கள் எந்த ஒரு பண்டில் முதலீடு செய்வதற்கு முன்பும் உங்களுடைய நிதி நலனை ஆராய்ந்து, நிதி ஆலோசகரின் ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

