இந்தியாவில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி வகிக்கும் ஹூண்டார் மோட்டார் நிறுவனம் நீண்ட காலமாக ஊழியர்களுடன் நிலவி வந்த ஊதிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த செய்து வெளியானதை அடுத்து இந்நிறுவன பங்கு உச்சத்தை எட்டியது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) மற்றும் யுனைடெட் யூனியன் ஆஃப் ஹூண்டாய் எம்ப்ளாயீஸ் (UUHE) எனப்படும் தொழிலாளர்கள் அமைப்புக்கும் இடையே 2024-2027 ஆம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், வாகனத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஊதிய ஒப்பந்தமானது ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 31, 2027 வரை அமலில் இருக்கும்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஹூண்டாய் நிறுவனத்தின் பங்குகள் 1.95% உயர்ந்து, ஒரு பங்கு ரூ.2,653 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஊழியர்களுக்கான மாத ஊதியம் ரூ. 31,000 வரை அதிகரிக்கும். இது மூன்று ஆண்டுகளில், 55%, 25% மற்றும் 20% என்ற விகிதத்தில் வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு, வாகன உற்பத்தி துறையிலேயே சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஊதிய உயர்வைத் தவிர, ஊழியர்களுக்கான சிறந்த மருத்துவ காப்பீடு மற்றும் மேம்பட்ட நலத்திட்டங்களையும் வழங்குவதாக ஹூண்டாய் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான யங்ம்யூங் பார்க் இது குறித்து பேசுகையில், "ஹூண்டாயில் எங்கள் ஊழியர்கள் தான் எங்கள் வெற்றிக்கு மிக முக்கியமானவர்கள். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலின் அடிப்படையில் உருவான இந்த ஒப்பந்தம், ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கும் என்றார். ஒரு முற்போக்கான பணியிட கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்தார்.
யுனைடெட் யூனியன் ஆஃப் ஹூண்டாய் எம்ப்ளாயீஸ் என்பது 2011 இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பு. இது ஹூண்டாய் இந்தியா ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி அமைப்பாக செயல்படுகிறது. ஆகஸ்ட் 31, 2025 நிலவரப்படி, இந்த தொழிற்சங்கம் 1,981 ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர் பிரிவில் 90% பேரை உள்ளடக்கியது. ஊழியர்களின் நலன், உரிமைகள் மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்களில் இந்த அமைப்பு நிர்வாகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஹூண்டாய் நிறுவன பங்கு இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு பண்டிகை கால தொடக்கம் ஆகியவை வாகன விற்பனையை அதிகரித்து இந்நிறுவன பங்கின் மதிப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications