பங்குச் சந்தையில் இன்று ஹூண்டாய் மோட்டர்ஸ் இந்தியா அதன் ஐபிஓ பங்கு வெளியீட்டு விலையை விட 1.5% தள்ளுபடியுடன் ரூ.1,931 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. பங்கு வெளியீட்டு விலையான ரூ.1,960 உடன் ஒப்பிடும்போது, மும்பை பங்குச் சந்தையில் ரூ.1,931 என்ற விலையிலும், தேசிய பங்குச் சந்தையில் ரூ.1,934-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. தள்ளுபடியுடன் தொடங்கிய ஐபிஓவில் பங்குகள் தற்போது ஆரம்பத்திலேயே சறுக்கியுள்ளது. அதன்படி பங்குகள் 0.08% சரிவுடன் ரூ.1929.50 ஆக வர்த்தகமாகிறது. தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் அதன் இந்திய சந்தையில் ஐபிஓ மூலமாக 17.5% பங்குகளை விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் இந்தியாவின் பங்குகள் ரூ.27,870 கோடி ஐபிஓவுக்குப் பிறகு அறிமுக வர்த்தகத்தில் வீழ்ச்சியடைந்தன. அறிமுகமான ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை அதன் சந்தை மதிப்பு ரூ.59.58 லட்சம் கோடியாகவும், அதன் 52 வார அதிகபட்ச விலையாக ரூ.1968.80 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலையாக ரூ.1872.20 ஆகவும் நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹூண்டாய் ஐபிஓவிற்கான கிரே மார்க்கெட்டில் 2% ஆகக் குறைந்தது. ஐபிஓ பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.1,960க்கு மேல் ரூ.45-50 பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்பட்டது. இது முந்தைய உச்சநிலையான 5% இலிருந்து சரிவைக் கண்டது. இருப்பினும் இது நேற்றைய சரிவு -3% இலிருந்து மீண்டது. இது ஏற்ற இறக்கமான கிரே மார்க்கெட் விலையிலிருந்து இன்று பங்கு பட்டியலிடுவதற்கு முன்னதாக முதலீட்டாளர்களின் உணர்வை மாற்றியமைத்துள்ளது.
இதற்கிடையில், பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களில் ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவன பங்குகள் காலை 10.16 மணி நிலவரப்படி சுமார் 3.34% சரிவுடன் ரூ.1866.60 ஆக வர்த்தகமாகிறது.
2 உலகளாவிய ஆய்வாளர்கள் இந்த பங்கு பற்றிய பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். நோமுரா வாங்குதல் மதிப்பீட்டுடன் ரூ.2472 இலக்கை வழங்கியுள்ளது. அதேபோல், Macquarie சிறந்த வாங்குதல் மதிப்பீட்டை வழங்கியுள்ளது. ரூ 2235 இலக்கை கொடுத்துள்ளது. இது அதன் வெளியீட்டு விலையுடன் ஒப்பிடும்போது இது 26% அதிகமாகும்.
தள்ளுபடி பட்டியல் இருந்தபோதிலும், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் வலுவான அடிப்படைகள், இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தியாளர் மற்றும் SUV பிரிவில் அதன் சிறந்த கவனம், அதன் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை தொடர்ந்து ஆதரிக்கப்படுவதாகவும், நீண்ட காலக் அடிப்படையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வைத்திருப்பதைக் கருத்தில் கொள்ளலாம் எனவும், இது எதிர்கால செயல்திறன் நிறுவனத்தின் போட்டி சந்தை நிலை மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்புகளால் இயக்கப்படும் என ஸ்வஸ்திக இன்வெஸ்ட்மார்ட் தலைவர் ஷிவானி நயதி கூறியுள்ளார்.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications