ஐபிஓ சந்தையில் இன்று வெளியாகும் தென் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவிற்காக முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்துகிடக்கின்றனர். இந்த ஐபிஓ ஆனது இன்று அக்டோபர் 15 அன்று தொடங்கி வரும் அக்டோபர் 17 வரை திறகப்பட்டிருக்கும். இதற்கான ஒரு பங்கின் விலை ரூ.1,865-1,960 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.27,870 கோடியை நிறுவனம் ஐபிஓ மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் தற்போதைய ஜிஎம்பி வெறும் ரூ.65 ஆக உள்ளது. இதில் ஆங்கர் முதலீட்டாளர்கள் அக்டோபர் 14 முதல் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓவிற்கு பெரும்பாலான தரகு நிறுவனங்கள் பங்குகளை வாங்க அறிவுறுத்தியுள்ளன.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ஐபிஓ ஆனது இந்திய துணை நிறுவனமான எல்ஐசியின் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஐபிஓவை விட அதிகமாகும். இது தென் கொரியாவிற்கு வெளியே ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் பங்குச் சந்தை பட்டியலாகும். 2003 இல் மாருதி சுஸுகி இந்தியாவின் ஐபிஓவிற்கு பிறகு நிறுவனம் உள்நாட்டு பயணிகள் வாகனத்தின் 15% சந்தைப் பங்கைக் கொண்ட இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகும். பெரும்பாலான தரகு நிறுவனங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அறிவுறுத்தியுள்ளன. ஏனெனில், நிலையான வளர்ச்சி, நல்ல நிதி நிலை மற்றும் ஆரோக்கியமான SUV தயாரிப்புகளால் பங்குகளை வாங்கலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் அறிவுறுத்தியுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விவரங்கள்: ஹூண்டாய் மற்றும் கியாவை உள்ளடக்கிய ஹூண்டாய் மோட்டார் குழுமம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 7.3 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து, கார் விற்பனையின் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோ ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர் ஆக (OEM) உள்ளது. தென் கொரிய நிறுவனம் 1996 முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா முதன்மையாக நான்கு சக்கர பயணிகள் வாகனங்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் என்ஜின்கள் போன்ற பாகங்களை இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் தயாரித்து விற்பனை செய்கிறது. தற்போது, வாகன போர்ட்ஃபோலியோவில் செடான்கள், ஹேட்ச்பேக்குகள், SUVகள் மற்றும் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் உட்பட 13 பயணிகள் வாகன மாடல்களை கொண்டுள்ளது.
இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 1,366 சேல்ஸ் பாயிண்டுகள் மற்றும் 1,550 சேவை மையங்களில் நெட்வொர்க்கை கொண்ட வாகன தயாரிப்பாளராக உள்ளது. ஹூண்டாய் மோட்டார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் இயங்கி வருகிறது. இது அமெரிக்க போட்டியாளர்களான ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவற்றை தாண்டி இந்திய சந்தைகளில் முத்திரை பதித்த சில வெளிநாட்டு வாகன நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
CRISIL அறிக்கையின்படி, மார்ச் 31, 2024 நிலவரப்படி, நிறுவனம் இந்தியாவில் ஏறக்குறைய 12 மில்லியன் பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி மூலம் விற்பனை செய்துள்ளது. அதன்படி, தென் கொரிய நிறுவனத்தின் இந்தியப் பிரிவு 2022, 2023 மற்றும் 2024 நிதியாண்டுகளிலும், ஜூன் 30, 2024 மற்றும் 2009 நிதியாண்டிலிருந்து முடிவடைந்த மூன்று மாதங்களிலும் உள்நாட்டு விற்பனை அளவுகளின் அடிப்படையில் இந்திய பயணிகள் வாகனச் சந்தையில் இரண்டாவது பெரிய ஆட்டோ ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர் ஆக உள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஐபிஓ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை: ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஐபிஓ அடிப்படையில் பங்குகள் ஒதுக்கீடு ஆனது வரும் அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை ஆகும். அக்டோபர் 21 திங்கட்கிழமை முதல் பணத்தைத் திரும்பப்பெறலாம். அதேபோல், பணத்தைத் திரும்பப் பெற்ற அதே நாளில் பங்குகள் ஒதுக்கப்பட்டவர்களின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். அக்டோபர் 22, 2024 செவ்வாய்க்கிழமை என நிர்ணயிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் தேதியுடன் பிஎஸ்இ, என்எஸ்இயில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பங்குகள் அறிமுகமாகும்.
ஹூண்டாய் மோட்டர்ஸ் இந்தியா லாட் அளவு அளவு ஆனது ஒரு விண்ணப்பத்திற்கான முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஏழு பங்குகளுக்கு வாங்கலாம். இதில், சில்லறை முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.13,720 ஆகும்.
ஹூண்டாய் மோட்டர்ஸ் இந்தியா சுமார் ரூ.27,870.16 கோடிக்கு மேல் திரட்ட திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் புதிய பங்குகளை ஐபிஓவில் வெளியிடாது. அதில் தாய் நிறுவனத்தின் 142,194,700 பங்குகள் அதாவது 14.22 கோடி பங்குகள் அதன் முழுச் சொந்தமான யூனிட்டில் 17.5 சதவீத பங்குகளை சில்லறை மற்றும் பிற முதலீட்டாளர்களுக்கு விற்பனைக்கான சலுகையின் மூலம் (OFS) வெளியிடும். இந்த ஐபிஓவில் புதிய வெளியீடு கூறுகள் எதுவும் இல்லை.
இந்த ஐபிஓ அளவின் பாதி தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் வரை ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படலாம். மேலும், 15 சதவீத பங்குகள் நிறுவனமற்ற முதலீட்டாளர்களுக்காகவும், மீதமுள்ள 35 சதவீத பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. நிறுவனம் தனது ஊழியர்களுக்காக 7,78,400 ஈக்விட்டி பங்குகளை முன்பதிவு செய்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஐபிஓவின் புக்-ரன்னிங் லீட் மேனேஜர்கள் (பிஎல்ஆர்எம்கள்) கோடக் மஹிந்திரா கேபிடல் கம்பெனி லிமிடெட், சிட்டிகுரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் & கேபிடல் மார்க்கெட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜேபிபி மற்றும் ஜேபி மோர்கன் ஸ்டான்லி இந்தியா கம்பெனி பிரைவேட் லிமிடெட் உள்ளன. அதேபோல் இதன் பதிவாளராக கே ஃபின் டெக்னாலஜிஸ் உள்ளது.
இதற்கிடையில், ஹூண்டாய் மோட்டர்ஸ் உதிரிபாகங்கள் மற்றும் பொருட்களுக்கான குறைந்த எண்ணிக்கையிலான சப்ளையர்களை சார்ந்துள்ளது. அதன் செயல்பாடுகளுக்குத் தேவையான பாகங்கள் மற்றும் பொருட்களின் விலையில் அதிகரிப்பு அதன் வணிகத்தையும் செயல்பாடுகளின் முடிவுகளையும் இது மோசமாக பாதிக்கலாம். பாகங்கள் மற்றும் பொருட்கள் கிடைப்பதில் குறுக்கீடு அதன் செயல்பாடுகளை மோசமாக பாதிக்கும். அதன் நிறுவன உரிமையாளர்கள் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தை செயல்பாடுகள், பாகங்கள் மற்றும் பொருட்களுக்கு சார்ந்துள்ளது.
GMP பெரும் சரிவைக் கண்டு சுமார் ரூ.65 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் ரூ.570 ஆக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது தற்போது இது 90 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், இந்த பங்கு நீண்ட காலத்திற்கு நல்லது என்றும், எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரும் என்றும் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் சில ஆதாயங்கள் இருக்கலாம். எனவே நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு நல்ல இரட்டை இலக்க வருமானமும் இருக்கும் வாய்ப்புள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிபுணர் கூறியுள்ளார்.
எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் நீண்ட காலத்திற்கான பங்கை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறது. வலுவான பிராண்ட், பிளாக்பஸ்டர் மாடல்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவை நிறுவனத்தின் பலத்தை உயர்த்தியுள்ளன.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications