முதலீட்டாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஐபிஓவில் இன்று முதல் முதலீடு செய்யலாம். ஐபிஓ ஏற்கனவே தொடங்கப்பட்டு ஒரு பங்கின் விலை ரூ.1,865-1,960 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதலீடுகள் அக்டோபர் 17 வரை அனுமதிக்கப்படும் .அக்டோபர் 18 அன்று பங்கு ஒதுக்கீடு மற்றும் அக்டோபர் 22 அன்று பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படும்.
முன்னதாக, நிறுவனம் 225 ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.8,315.3 கோடியை திரட்டியது. தென் கொரியாவை தளமாகக் கொண்ட ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், கியா மோட்டார்ஸ் மற்றும் கியா கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது. இந்த ஐபிஓவில் அதன் பங்குகளை விற்கிறது.

யாரிடம் இருந்து முதலீடு வசூல்?: சிங்கப்பூர் அரசு, நியூ வோல்ர்டு ஃபண்ட் ஐஎன்சி, மானிடெரி அதாரிட்டி ஆஃப் சிங்கப்பூர், கவர்ன்மெண்ட் பென்ஷன் ஃபண்ட் குளோபல் மற்றும் அமெரிக்கன் ஃபண்ட்ஸ் இன்சூரன்ஸ் சிரீஸ் போன்ற உலகளாவிய முன்னணி நிறுவன முதலீட்டாளர்கள் நியூ வேர்ல்ட் ஃபண்ட் ஆகியன நிறுவனத்தில் ரூ.2,191.66 கோடி முதலீடு செய்துள்ளனர்.
நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு 1,960. 4.2 கோடி பங்குகள் விலைக்கு ஏற்ப முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உலகளாவிய முதலீட்டாளர்களில் பெய்லி கிஃபோர்ட், வான்கார்ட், சிட்டி ஆஃப் நியூயார்க் குரூப் டிரஸ்ட், மூரியா ஃபண்ட், பிளாக்ராக், ஏகான் முதலீட்டு மேலாண்மை, ஷ்ரோடர், கனடா ஓய்வூதியத் திட்ட முதலீட்டு வாரியம், ஜேபி மோர்கன், ஈஸ்ட்ஸ்பிரிங் முதலீடுகள், கோல்ட்மேன் சாக்ஸ், காப்தால் மொரிஷியஸ், சொசைட்டி ஜெனரல், மோர்கன் ஸ்டான் ஜெனரல் ஆகியவை அடங்கும். , சிட்டிகுரூப் குளோபல் , அபுதாபி முதலீட்டு ஆணையம் மற்றும் எச்எஸ்பிசி குளோபல் ஆகியவையும் இதில் முதலீடு செய்துள்ளன.
சொத்து மேலாண்மை மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், நிப்பான் லைஃப் இந்தியா, கோடக் மியூச்சுவல் ஃபண்ட், ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிரஸ்டி, யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட், மிரே அசெட், பிராங்க்ளின் இந்தியா, மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட், அசோகா வைடோக், இன்வெஸ்கோ இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா எம்எஃப், பந்தன் மியூச்சுவல் ஃபண்ட், டாடா மியூச்சுவல் ஃபண்ட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ், கனரா ஹெச்எஸ்பிசி லைஃப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஐபிஓவில் பெரும் தொகையை முதலீடு செய்தது.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.366.5 கோடி முதலீடு செய்துள்ளன.
வாங்கப்பட்ட ரூ.4.2 கோடி பங்குகளில், 1.46 கோடி பங்குகள் 21 உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட்டில் 83 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று ஹூண்டாய் பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஐபிஓ இன்று அக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ரூ.27,870 கோடி ஐபிஓவில் ஒரு பங்குக்கு 1,865-1,960 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அக்டோபர் 17ம் தேதி வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. நிறுவனம் ஊழியர்களுக்கு 7,78,400 பங்குகளை ரூ.186 தள்ளுபடி விலையில் ஒதுக்கியுள்ளது. பங்கு ஒதுக்கீடு அக்டோபர் 18 ஆம் தேதி முடிவடையும் மற்றும் பங்குகள் அக்டோபர் 22 ஆம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
இதில், இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், ஆஃபர் ஃபார் சேல் மூலம் பங்குகளை விற்பனை செய்து வருகிறது. இதில் புதிய பங்குகள் வெளியீடு இருக்காது.
நாளுக்கு நாள், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஜிஎம்பி வீழ்ச்சியடைந்து வருகிறது. இது முதலீட்டாளர்களை கவலையடையச் செய்துள்ளது. ஒரு கட்டத்தில் ரூ.570 ஆக இருந்த ஜிஎம்பி தற்போது ரூ.45 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications