மும்பை: சென்செக்ஸ், நிஃப்டி உள்ளிட்ட பங்குகள் கடந்த வாரத்தில் பெரியளவில் மாற்றமின்றி முடிவடைந்தன.
சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதாரம் மந்த நிலைக்கு மத்தியில், நுகர்வோர் விலை குறியிடும் 5 மாத உச்சமான 7.41%-ஐ தொட்டது. இது பெரும்பாலும் உணவு பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், அது மேற்கோண்டு பணவீக்கத்தினை தூண்டியுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி விகிதம் 0.8% சரிவினைக் கண்டுள்ளது.
கவனிக்க வேண்டிய காரணிகள்
கடந்த வாரத்தில் அமெரிக்க பத்திரங்கள், டாலர் குறியீடு, கச்சா எண்னெய் விலை மற்றும் முன்னணி பொருளாதார நாடுகளின் வளர்ச்சி, அன்னிய முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் என பலவும் சந்தையில் எதிரொலித்தன. இது வரவிருக்கும் வாரத்திலும் வெளியாகி கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகளை பொறுத்து, சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மேற்கண்ட காரணிகளும் எதிரொலிக்கலாம்.
பணவீக்கம்
வரவிருக்கும் வாரத்திலும் சர்வதேச காரணிகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இதுவும் சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பணவீக்கம் என்பது மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால், கீழ்கண்ட பங்குகளையும் பரிசீலிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கவலையளிக்கும் காரணிகள்
தற்போது உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை, பொருளாதார மந்தம், சீனாவின் பொருளாதார நிலை, ஐரோப்பாவின் மந்த நிலை, டெக் நிறுவனங்களின் வீழ்ச்சி உள்ளிட்ட பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. இது சர்வதேச அளவில் இந்தியா உள்பட பல நாடுகளும், இதன் தாக்கத்தினை உணர ஆரம்பித்துள்ளன.
டெக் பங்குகளை வாங்க வாய்ப்பு
எனினும் இந்த வாய்ப்பானது முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெரும் சரிவினைக் கண்டுள்ள டெக் பங்கினை வாங்க இது சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது மந்த நிலையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், வரவிருக்கும் காலாண்டுகளில் இது மீண்டும் டிஜிட்டல் தேவை அதிகரிக்கும்போது அதிகரிக்கலாம். இது டெக் பங்குகள் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
ஐடி பங்குகள் பலத்த சரிவு
நடப்பு ஆண்டில் நிஃப்டி ஐடி இன்டெக் 30% சரிவினைக் கண்டுள்ளது. நாஸ்டாக்-கும் 30% சரிவினைக் கண்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் 60% மேலாகவும் சரிவினைக் கண்டுள்ளது. ரோபின்வுட் 40% சரிவிலும், ஆப்பிள் மற்றும் கூகுள் உள்ளிட்ட பங்குகளும் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அடுத்த 1- 3 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு வாங்க சரியான வாய்ப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தீபாவளி சீசன் பங்குகள்
சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், டாடா நுகர்வோர் பொருட்கள், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், மசாகன் டாக்ஸ், டாடா பவர், டாடா எல்க்ஸி உள்ளிட்ட பங்குகளை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
வாங்கலாம்
இதே வங்கி துறை சார்ந்த பங்குகளும் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எஸ்பிஐ, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஃபோசிஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications