ஐசிஐசிஐ பேங்க் பங்குகளின் விலை நேற்று வெள்ளிக்கிழமை காலை 457 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி, மாலை 469 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக ஐசிஐசிஐ பேங்க் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்றது தான் என்கிறார்கள். கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 2.6 சதவிகிதம் ஐசிஐசிஐ பங்குகளை விற்று வெளியேறி இருக்கிறார்களாம்.
இப்படி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்த பங்கை விற்று வெளியேறி இருப்பதால், இந்திய இண்டெக்ஸ்களில் ஐசிஐசிஐ வங்கிக்கு இருக்கும் வெயிட்டேஜ் அதிகரிக்கும் எனச் சொல்கிறார்கள் தரகு நிறுவனங்கள். இதனால் தான் பங்கு விலை கட கடவென நேற்று அதிகரித்து இருக்கிறது. அதோடு ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் தன் வாழ்நாள் உச்சத்தில் வியாபாரமாகிக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்டுகள்.

இந்தியாவில் 3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்ட நிறுவனங்கள் பட்டியலை எடுத்தால் அனேகமாக 10 நிறுவனங்கள் வரலாம். கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவு அடைந்த போது, இந்தியாவில் 8 நிறுவனங்கள் மட்டுமே 3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை விட அதிகமான சந்தை மதிப்பைக் கொண்டிருக்கிறது. இதில் எட்டாவது இடத்தில் நிற்கிறது ஐசிஐசிஐ வங்கி.
இந்தியாவில் நான்கு வங்கிப் பங்குகள் மட்டுமே இந்த 3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டு இருக்கின்றன. ஹெச் டி எஃப் சி, கோட்டக் மஹிந்திரா, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி தான் அந்த நான்கு பங்குகள். இப்போதும் வழக்கம் போல ஹெச் டி எஃப் சி வங்கி சுமார் 6.7 லட்சம் கோடி ரூபாய் உடன் வங்கிப் பங்குகளிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக வளம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியான ஐசிஐசிஐ வங்கி சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வகையில், நிகர லாபம் சுமார் 28 சதவிகிதம் சரிவைக் கண்டிருக்கிறது. வரும் வர்த்தக நாளில் இந்த விலை ஏற்றம் தொடருமா என்பது சந்தேகமே..! எனவே முதலீட்டாளர்களே சுயமாக சிந்தித்து, தீர விசாரித்து, நிறுவனத்தை பற்றி நன்றாக புரிந்து கொண்ட பின், பங்குகளின் முதலீடுச் செய்யவும்.


Click it and Unblock the Notifications