அதானி குழுமத்தின் பங்குகள் பலவும் கடந்த சில நாட்களாக கடும் சரிவினைக் கண்டு மீண்டும் தற்போது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அதானி குழும்த்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் சர்ச்சைகளுக்கு பிறகு இப்பங்குகளை மீண்டும் வாங்கலாமா? வேண்டாமா? என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
இத்தகைய சூழலில் ஐசிஐசிஐ டேரக்ட் சில அதானி குழும பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
இதில் என்னென்ன பங்குகளை வாங்கலாம். அவற்றின் இலக்கு என்ன? ஏன் இப்பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.
வாங்கலாம்
அதானி குழுமத்தினை சேர்ந்த பங்குகலான ஏசிசி சிமெண்ட் மற்றும் அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களையும் வாங்கலாம் என ஐசிஐசிஐ பரிந்துரை செய்துள்ளது.
இந்த பங்குகள் தற்போதைய லெவலில் இருந்து 40% வரையில் ஏற்றம் காணலாம் என பரிந்துரை செய்துள்ளது.
ஏசிசி சிமெண்ட்
ஏசிசி நிறுவனத்தினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள நிபுணர்கள், இலக்கு விலையாக ஒரு பங்குக்கு 2600 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது 40% வரையில் ஏற்றம் காணலாம் என மதிப்பிட்டுள்ளது. இதன் தற்போதைய விலை என் எஸ் இ-யில் 1880.05 ரூபாயாக உள்ளது. இது கடந்த அமர்வின் முடிவு விலையில் இருந்து, 1.88% சரிவில் முடிவடைந்துள்ளது.
ஏசிசி சிமெண்ட் பங்கு வரலாறு
இப்பங்கின் விலையானது கடந்த 1 வாரத்தில் மட்டும் 2.26% அளவுக்கு குறைந்தும் கண்டும்., 1 மாதத்தில் 22.15% சரிந்தும், இதே 1 வருடத்தில் 18.25% சரிவினைக் கண்டும், இதே கடந்த 3 ஆண்டுகளில் 29.76% ஏற்றத்த்திலும், 5 வருடத்தில் 13.38% அளவுக்கு ஏற்றம் கண்டும் காணப்படுகின்றது. இந்த மிட் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 35,491.79 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஏசிசி நிறுவனம் பற்றி
இந்தியாவின் பிரபலமான சிமெண்ட் நிறுவனமான ஏசிசி சிமெண்ட்34.5MT திறனை கொண்டது. இது இந்தியாவின் மிக பழமையான சிமெண்ட் நிறுவனங்களில் ஒன்று. இது இந்தியாவில் 50 இடங்களில் ரெடி மிக்ஸ் உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது.
அம்புஜா சிமெண்ட்ஸ்
அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனமும் 40% வரையில் லாபம் கொடுக்கலாம் என கணித்துள்ள நிபுணர்கள், இதன் இலக்கு விலையை 500 ரூபாயாக ஒரு பங்குக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது இந்த பங்கின் விலைய்யானது என்.எஸ்.இ-யில் 360.50 ரூபாயாக காணப்படுகின்றது.
அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு விலை வரலாறு
அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு விலையும் கடந்த 1 வாரத்தில் 3.56% சரிவினைக் கண்டும், இதே 1 மாதத்தில் 29.96% சரிவினையும் கண்டுள்ளது. இதே 1 வருடட்தில் 3.88% சரிவிலும், 3 வருடத்தில் 73.97% லாபத்தினையும், இதே 5 வருடத்தில் 39.17% லாபத்தினையும் கொடுத்துள்ளது. இதற்கிடையில் இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 71,840.64 கோடி ரூபாயாக உள்ளது.
அம்புஜா சிமெண்ட்ஸ் பற்றி
இந்தியாவின் பிரபல சிமெண்ட் உற்பத்தியாளரான அம்புஜா சிமெண்ட்ஸ, 31.5 MT உற்பத்தி திறனை உடையது. இதில் வடக்கு பகுதியில் 35%மும், தெற்கு பகுதியில் 24%மும், மேற்கு பகுதியில் 20%மும், கிழக்கு பகுதியில் 21%மும் திறனை கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தைப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் தனது இருப்பினை கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமாகும்.


Click it and Unblock the Notifications