பேடிஎம் பங்கினை வாங்க பரிந்துரை செய்த நிபுணர்கள்.. இலக்கு விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் பங்கு சந்தையில் நுழைந்ததில் இருந்தே, தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. தொடர்ச்சியாக பல காலாண்டுகளாகவே நஷ்டத்தினை மட்டும் கண்டு வந்த நிலையில், இப்பங்கின் விலையும் தொடர்ந்து சரிவில் காணப்படுகிறது.

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (Paytm) நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின், ஆரம்பத்தில் இருந்தே 2080 - 2150 ரூபாய் என்ற லெவலில் வெளியிடப்பட்டது.

ஆனால் வெளியிடப்பட்ட நாளில் இருந்து, இன்று வரையில் அந்த லெவலை எட்டவில்லை எனலாம். ஐபிஓ-வில் வாங்கிய முதலீட்டாளர்களுக்கு இன்று வரையில் நஷ்டம் தான்.

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

பேடிஎம் நிறுவனத்தின் என் எஸ் இ-யில் பங்கு விலையானது, 7.17% அதிகரித்து, 536.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 543.65 ரூபாயாகவும் உள்ளது. இதே இன்றைய குறைந்தபட்ச விலை 507.50 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் பங்கு விலையானது, 7.06% அதிகரித்து, 536.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 543.45 ரூபாயாகவும் உள்ளது. இதே இன்றைய குறைந்தபட்ச விலை 506 ரூபாயாகும்.இதே இதன் 52 வார உச்ச விலை 1724 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 439.60 ரூபாயாகும்.

ஏற்றம் காணுமா?

ஏற்றம் காணுமா?

இந்த நிறுவனம் தொடர்ச்சியாக நஷ்டத்தினையே கண்டு வரும் நிலையில், பல நிபுணர்களும் முன்னதாக இப்பங்கின் விலையானது இப்போதைக்கு ஏற்றம் காணுமா? என்ற சந்தேகத்தினையும் எழுப்பி வந்தனர். சொல்லப்போனால் நிபுணர்கள் பலரும் இப்பங்கின் விலையானது சரியலாம் என முன்னபாக கணித்து வந்தனர்.

வாங்கலாம்?

வாங்கலாம்?

ஆனால் முதல் முறையாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம், இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இப்பங்கின் விலையினை 1285 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

ஸ்மால் கேப் நிறுவனமான பேடிஎம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இதன் செயல்பாடுகள் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், இதனை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

வருவாய் உச்சம்

வருவாய் உச்சம்

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர வருவாய் விகிதம் 2013.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டினை காட்டிலும் 13.02% அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் 1781.60 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டில் 1134.50 கோடி ரூபாயாக இருந்தது. இதே வரிக்கு பிந்தைய லாபம் -562.30 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

லாபம் அதிகரிக்கலாம்

லாபம் அதிகரிக்கலாம்

முந்தைய காலாண்டுகளை காட்டிலும் செயல்பாட்டு வருவாய் அதிகரித்துள்ளது. இதன் எபிட்டா விகிதம் சரிவினைக் கண்டுள்ளது. எப்படி இருப்பினும் அடுத்த 12 - 18 மாதங்களில் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 முதலீட்டாளர்கள் வசம்

முதலீட்டாளர்கள் வசம்

நிதிச் சேவை, டிஸ்டிரிபியூசன், கிளவுட் என பல காரணிகளுக்கு மத்தியில், வளர்ச்சியானது மேம்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் புரோமோட்டார்ஸ் நிறுவனத்தின் வசம் எந்த பங்குகளும் இல்லை. இதன் அன்னிய முதலீட்டாளர்கள் வசம் 5.45%மும், உள் நாட்டு முதலீட்டாளார்கள் வசம் 1.14% பங்குகளும் உள்ளன.

இலக்கு விலை

இலக்கு விலை

இதற்கிடையில் நிபுணர்கள் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இதன் இலக்கு விலையினை மாற்றம் செய்யாமல் 1285 ரூபாயாக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

சமீபத்தில் விஜய் சேகர் ஷர்மா, சமீபத்திய காலாண்டுகளாக தொடர்ந்து வலுவாக செயல்பாட்டு லீவரேஜ்-ஐ கண்டு வருகின்றோம். இதே எபிட்டா இழப்புகளை கண்டது. தற்போது லாபகரமான நிறுவனமாக மாறும் அளவுக்கு நெருங்கியுள்ளோம். இதன் மூலம் அடுத்த ஆண்டு எங்கள் பயணம் நேர்மறையாக இருக்கும். இது குறித்து நான் உற்சாகமாக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+