இந்த பங்குகள் நல்ல ஏற்றம் காணலாம்.. தரகு நிறுவனம் பலே கணிப்பு..!

பங்குச் சந்தையை பொறுத்தவரையில் நீண்ட கால முதலீடுகள் என்பது, மிகவும் லாபகரமான முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய நினைக்கும் பெரும்பாலானோர், குறுகிய காலத்தில் பெரிய அளவிலான லாபம் சம்பாதித்து விடலாம் என்று நினைப்பது தான் பலரும் செய்யும் மிகப் பெரிய தவறு எனலாம். அப்படி நினைப்பவர்கள் பலரும் நஷ்டத்தினை காண்கிறார்கள்.

பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது முதலாவதாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சந்தையின் போக்கு என்ன? முதலீடு செய்யப்போகும் பங்கின் முழு நிலவரம் என்ன? உங்களின் முதலீட்டு காலம் நீண்ட காலமா அல்லது குறுகிய காலமா என பார்க்க வேண்டும்.

தீபாவளி பங்குகள்

தீபாவளி பங்குகள்

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி ஐசிஐசிஐ செக்யூரிட்டி நிறுவனம், சில தீபாவளி பங்குகளை பரிந்துரை செய்துள்ளது. அது என்னென்ன பங்குகள், ஏன் இதனை பரிந்துரை செய்துள்ளது? என்பதை தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். அந்தவகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்குகள் பாட்டா இந்தியா, டிசிஎன்எஸ் கிளாத்திங், பாங்க் ஆஃப் பரோடா, கேட்வே டிஸ்ட்ரிக்பார்க்ஸ், மகேந்திரா லைஃப்ஸ்பேஸ், ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட், வி எஸ் எஸ் எல்.

பாட்டா இந்தியா இலக்கு

பாட்டா இந்தியா இலக்கு

பாட்டா இந்தியாவைப் பொறுத்தவரையில் இது ஒரு காலணி சார்ந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது செலவை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது. செலவினை குறைக்கும்போது, அது அதிக வருமானத்திற்கு வழி வகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லைட் பிரான்சிசிகள் மூலம் தனது சில்லரை வர்த்தக கடைகளையும் விரிவாக்கம் செய்து வருகின்றது. இது மேற்கொண்டு இந்த நிறுவனத்தின் வருவாயினை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்தான் ஐ சி ஐ சி ஐ சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்த பரிந்துரையை செய்துள்ளது. இதன் விலையானது 1900 - 2020 ரூபாய்க்கு வாங்கலாம் என்ற நிலையில், இதன் டார்கெட் 2,380 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

டிசிஎன்எஸ் கிளாத்திங் இலக்கு

டிசிஎன்எஸ் கிளாத்திங் இலக்கு

ஜவுளி துறையை சேர்ந்த இந்த நிறுவனம் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், இதன் வருவாய் ஆனது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதன் உள்நாட்டு பிராண்டுகள் மூலம் பெரிய அளவில் வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கினை 720 - 760 ரூபாய்க்குள் வாங்கலாம் என்ற நிலையில், அதன் இலக்கு 860 ரூபாயாக தரகு நிறுவனம் கணித்துள்ளது.

பாங்க் ஆப் பரோடா இலக்கு

பாங்க் ஆப் பரோடா இலக்கு

பாங்க் ஆஃப் பரோடாவுடன் சில வங்கிகள் இணைப்பு பின்னர், அதன் செயல்பாட்டு திறன் ஆனது மேம்பட்டுள்ளது. இது மேற்கொண்டு இந்த வங்கியின் மூலதனத்தையும் அதிகரிக்க வழிவகை செய்துள்ளது. இந்த நிலையில் இவ்வங்கியின் ஒட்டுமொத்த செயல்திறன் வரும் ஆண்டுகளில், நல்ல வளர்ச்சியினை காணலாம் என கணித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இலக்கு விலை 120 ரூபாய் என்று தரகு நிர்ணயித்துள்ளது. இது 90 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு வாங்கலாம் என தரகு நிறுவனம் கூறியுள்ளது.

கேட்வே டிஸ்ட்ரிக்பார்க்ஸ் இலக்கு

கேட்வே டிஸ்ட்ரிக்பார்க்ஸ் இலக்கு

உள்கட்டமைப்பு துறையுடன் சம்பந்தப்பட்ட இந்த நிறுவனம் லாகிஸ்டிக்ஸ் தொழில் செய்து வருகின்றது. குறிப்பாக கிடங்குகள், கொள்கலன் சரக்கு, சரக்கு நிலையங்கள், கடல்வழி ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தை கையாளுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன் வளர்ச்சி விகிதமானது எதிர்காலத்தில் இதன் வருவாய் மேம்பட வழி வகுக்கும் என்ற நிலையில், இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க தரகு நிறுவனம் பரிந்துரைக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 255 ரூபாய் முதல் 275 ரூபாய் வரையில் வாங்கலாம் என்றும், இதன் இலக்கு விலை 350 ரூபாய் என கணித்துள்ளது.

மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் இலக்கு

மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் இலக்கு

இந்த தரகு நிறுவனத்தின் வலுவான வருவாயை கொண்ட பெற்றோர் நிறுவனங்கள், மேற்கொண்டு இந்த நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க மூலதனத்தினை உட்புகுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து, நிர்வாகம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கினை 255 ரூபாய் முதல் 280 ரூபாய் வரையில் வாங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. இதன் அடுத்த இலக்கு விலையானது 325 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இலக்கு

ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இலக்கு

கொரோனாவின் பிடியின் மத்தியில் ரியல் எஸ்டேட் துறையானது பெரும் வீழ்ச்சி கண்டு இருந்தது. இந்த நிலையில் கட்டுமான தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் தேவையானது மோசமான சரிவினைக் கண்டுள்ளது. எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து, தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கட்டுமான தொழிலுக்கு தேவையான உபகரணங்களுக்கான ஏற்றுமதியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 20% என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கினை 215 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் வாங்கலாம் என்றும், இதன் டார்கெட் விலை 300 ரூபாயாக தரகு நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

வர்தமான் ஸ்பெஷல் ஸ்டீல்

வர்தமான் ஸ்பெஷல் ஸ்டீல்

வர்தமான் ஸ்பெஷல் ஸ்டீல் நிறுவனம் அதன் மூலதனத்தினை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் பங்கு விலையானது வரும் காலத்தில் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த பங்கின் 250 ரூபாய் முதல் 275 ரூபாய் வரையில் வாங்கலாம் என்றும், இதன் இலக்கு விலை 340 ரூபாய் என்றும் கணித்துள்ளது *** மேற்கண்ட பங்குகள் தரகு நிறுவனத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், முதலீடு செய்யும் முன்பு இறுதி முடிவினை நீங்கள் எடுக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு மேற்கண்ட பங்குகள் பற்றி தெரிந்து கொண்டு அதன் பின்னர் முதலீடு செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+