ஸ்மால் கேப் பங்கினை வாங்க பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. இலக்கு விலை எவ்வளவு தெரியுமா?

ஃபேஸ் த்ரீ லிமிடெட் நிறுவனம் ஒரு ஸ்மால் கேப் பங்காகும். இதன் சந்தை மூலதனம் 834.02 கோடி ரூபாயாகும். ஜவுளித் துறையை சேர்ந்த ஒரு நிறுவனமாகும்.

இந்த பங்கின் விலையானது இன்று 342.95 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது இந்த ஆண்டில் இதுவரையில் 255.20% ஏற்றம் கண்டுள்ளது.

இந்த பங்கின் விலையானது கடந்த ஆறு மாதங்களில் 18.54% ஏற்றம் கண்டுள்ளது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

 

இப்பங்கானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மூவிங் ஆவரேஜ் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இந்த பங்கின் விலையானது கடந்த 5 அமர்வுகளில் 9.59% ஏற்றம் கண்டுள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் அதன் வருவாய் விகிதம் 44.53% அதிகரித்து, 157.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 108.67 கோடி ரூபாயாக இருந்தது.

எபிட்டா விகிதம்

எபிட்டா விகிதம்

இதன் எபிட்டா விகிதம் 21.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 56.25% ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 15,91 கோடி ரூபாயாக இருந்தது. இதுவும் கடந்த ஆண்டினை காட்டிலும் 85.22% அதிகமாகும். இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 8.59 கோடி ரூபாயாகும்.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

கடந்த 5 ஆண்டுகளாகவே இப்பங்கின் நிதி அறிக்கையானது எதிர்பார்த்தை விட நன்றாகவே வந்துள்ளது. இதன் CAGR விகிதம் 27% அதிகரித்துள்ளது. இதே மீடியம் டெர்மில் பல சவால்களை இந்த நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. எனினும் வளர்ச்சி நன்றாக இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தரகு நிறுவனம் பரிந்துரை

தரகு நிறுவனம் பரிந்துரை

இதற்கிடையில் தான் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையினை 405 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. அடுத்த 2 காலாண்டுகளுக்கு வலுவான ஆர்டர் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இன்றைய பங்கு நிலவரம் என்ன?

இன்றைய பங்கு நிலவரம் என்ன?

 

ஃபேஸ் த்ரீ லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று பி.எஸ்.இ-யில் 4.50% குறைந்து, 327.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று இதன் உச்ச விலை 345 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 326.70 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 413 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச பங்கு விலை 88.45 ரூபாயாகும்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+