இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய முதலீட்டை ஐபிஓ வாயிலாக ஈர்த்த நிறுவனங்கள், கடந்த ஒரு வருடமாக மந்தமான பொருளாதாரம் மற்றும் முதலீட்டு சந்தை காரணமாக நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட முடியாமல் மாடிக்கொண்டது. கடந்த சில மாதங்களாக சில நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் இன்று ஐபிஓ வெளியிட்ட ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி லிமிடெட்டின் (ideaForge Technology) 567 கோடி மதிப்புள்ள ஐபிஓ சில்லறை மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

ஐடியாஃபோர்ஜ் ஐபிஓ வெளியிட்ட முதல் நாளில் மதியம் 2 மணிக்குள், ஐடியாஃபோர்ஜ் ஐபிஓ பங்குகளுக்கு சுமார் 1.75 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் அதாவது முதலீடு கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு சுமார் 6.72 மடங்கு அதிக முதலீடு குவிந்துள்ளது.
ஐடியாஃபோர்ஜ் பங்குகள் 638 ரூபாய் முதல் 672 ரூபாய் வரையிலான விலையில் ஐபிஓ வெளியாகியுள்ளது, பங்குகளுக்கான அலாட்மென்ட் ஜூலை 4 ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லாட்-க்கு 22 பங்குகள் என மொத்தம் 567 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது. ஐடியாஃபோர்ஜ் ஐபிஓ மூலம் இன்போசிஸ்-க்கு எப்படி லாபம்..?
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், பாதுகாப்பு துறைக்கான டிரான்களை தயாரிக்கும் ஐடியாஃபோர்ஜ் நிறுவனத்தில் சுமார் 1,647,314 பங்குகளை ஏற்கனவே முதலீடு செய்து அதன் மொத்த முதலீட்டு பங்குகளில் இருந்து சுமார் 4.25 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்த பங்குகளை கட்டாயம் தற்போதை ஐபிஓ விலையான 638 ரூபாய் முதல் 672 ரூபாய்க்கு கீழ் தான் இன்போசிஸ் வாங்கியிருக்கும். இதனால் இந்த ஐபிஓ மூலம் பல கோடி ரூபாயை லாபமாக பெறும் என எதிர்பார்க்கிறது. தற்போதைய சந்தை கணிப்பின் படி ஐடியாஃபோர்ஜ் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது சுமார் 700 முதல் 750 ரூபாய் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications