ஒரேயொரு உத்தரவு.. 30% சரிந்த IEX பங்குகள்.. Market Coupling தான் மொத்த பிரச்சனைக்கும் காரணம்..?

இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் (IEX) நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட ஜூன் காலாண்டு முடிவுகளில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு ஒப்பீட்டில் 25% உயர்ந்து ரூ.120 கோடியாகவும், வருவாய் 19% அதிகரித்து ரூ.184.2 கோடியை எட்டியுள்ளது. ஆனாலும் IEX பங்குகள் மும்பை பங்குச்சந்கையில் 29.49% சரிந்து ரூ.132.45-ஆக முடிந்துள்ளது.

இந்த சரிவுக்கு முக்கிய காரணம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC) இந்திய மின்சார சந்தையில் சந்தை இணைப்பை (Market Coupling) அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்ததது தான். சந்தை இணைப்பு என்றால் என்ன..? இதற்கும் IEX பங்குகள் சரிய என்ன காரணம்..? Market Coupling மூலம் இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் இதுவரை அனுபவித்து வந்த மோனோபோலி நிலையை இழக்க உள்ளது.

ஒரேயொரு உத்தரவு.. 30% சரிந்த IEX பங்குகள்.. Market Coupling தான் மொத்த பிரச்சனைக்கும் காரணம்..?

சந்தை இணைப்பு:
சந்தை இணைப்பு (Market Coupling) என்றால், இந்தியாவில் இருக்கும் அனைத்து மின்சார எக்ஸ்சேஞ்ச் தளத்தை ஒன்றாக இணைப்பது. தற்போது சந்தையில் IEX, PXIL, HPX என 3 மின்சார எக்ஸ்சேஞ்ச் உள்ளது.

இதுவரை, ஒவ்வொரு எனர்ஜி எக்ஸ்சேஞ்ச்-ம் தான் விற்கப்படும் மின்சாரத்தின் விலையை தானே நிர்ணயித்து வந்தது, உதாரணமாக IEX தனது மின்சாரத்தின் விலையை தனக்கென தனி கணக்கீட்டை வைத்துக்கொண்டு அதன் விலையை நிர்ணயம் செய்து வந்தது.

விலை நிர்ணயத்தில் மாற்றம்:
ஆனால், 2026 ஜனவரி முதல், 3 நிறுவனங்களையும் இணைத்து முன்னிலைச் சந்தையில் (Day-Ahead Market - DAM) விலை நிர்ணய செய்யும் முறை அறிமுகமாக உள்ளது. இதை மத்திய மின்கட்டுப்பாட்டு அமைப்பு (Grid Controller of India) நிர்வகிக்கம் செய்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் அனைத்து எனர்ஜி எக்ஸ்சேஞ்ச்-களின் மின்சார விலையை GCI அமைப்பு முடிவு செய்து ஒரே விலையை நிர்ணயம் செய்யும்.

முன்னிலைச் சந்தை (DAM) என்றால் என்ன?
முன்னிலைச் சந்தை (DAM) என்பது பவர் எக்ஸ்சேஞ்ச்களில் ஒரு முக்கிய பகுதியாகும். இதில், மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர், அடுத்த நாள் தேவைப்படும் அல்லது விற்க விரும்பும் மின்சாரத்தின் அளவு மற்றும் விலையை இன்று ஏலம் மூலம் நிர்ணயம் செய்யப்படும்.

பொதுவாக மின்சார உற்பத்தியாளர்களான என்டிபிசி, டாடா பவர் போன்றவை தங்கள் மின்சாரத்தை குறிப்பிட்ட விலையில் விற்க DAM தளத்திற்கு அளிக்கின்றன, அதேபோல் மாநில மின்வாரியங்கள் மற்றும் தனியார் மின் விநியோகஸ்தர்கள் இந்த மின்சாரத்தை வாங்க விலையை DAM தளத்தில் பிட்டிங் செய்கின்றனர். IEX போன்ற மின்சார எக்ஸ்சேஞ்ச்-கள் இந்த கோரிக்கைகளை ஒரு ஏல முறையில் விலையை நிர்ணயிக்கின்றன.

ஒரேயொரு உத்தரவு.. 30% சரிந்த IEX பங்குகள்.. Market Coupling தான் மொத்த பிரச்சனைக்கும் காரணம்..?

IEX-இன் ஆதிக்கம் ஏன் சரிந்தது?
IEX இதுவரை இந்திய மின்சக்தி வர்த்தகத்தில் 84.2% சந்தை பங்கைக் கொண்டிருந்தது. அதாவது IEX நிறுவனத்திடம் தான் அதிகப்படியான மின்சாரம் வர்த்தகத்திற்காக வரும், இதனால் சப்ளை டிமாண்ட் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்து அதிகப்படியான லாபத்தை பார்த்தது. உதாரணமாக IEX நிறுவனத்தின் வர்த்தகத்தில் 90 சதவீதம் முன்னிலை சந்தை வர்த்தகம் தான்.

ஆனால், தற்போது சந்தை இணைப்பு மூலம் அனைத்து மின்சார எக்ஸ்சேஞ்ச்-ம் இணைக்கப்பட்டு மின்சாரத்தின் விலை Grid Controller of India நிர்ணயம் செய்யும் காரணத்தால் IEX இத்துறையில் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் இழக்கிறது.

2026 ஜனவரி மூலம் IEX விற்கும் அதே விலையில் தான் PXIL மற்றும் HPX போன்ற சிறிய நிறுவனங்களும் விற்கும். இதனால் IEX-இன் வருவாய் மற்றும் லாப விகிதம் பாதிக்கப்படலாம். இதுதான் வியாழக்கிழமை வர்த்தகத்தில் IEX பங்குகள் 29 சதவீதம் வரையில் குறைய காரணமாக அமைந்துள்ளது.

IEX-இன் எதிர்காலம்:
மின்சார பரிமாற்ற சந்தையில் கொண்டு வரப்படும் சந்தை இணைப்பு, மின்சார வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடிகள் குறைக்க உதவும். ஆனால், IEX-க்கு இது பெரும் இழப்பாக அமையும், இதேபோல் PXIL மற்றும் HPX போன்ற சிறிய நிறுவனங்களும் இது ஜாக்பாட் ஆக அமையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+